Meenatchi thirukalyanam

மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலையில் நடைபெறுகிறது.கொரோனா தாக்கத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, இந்தாண்டு கொடியேற்றத்துடன் நடைபெறவில்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்தப்படுகிறது.

 4 சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று திருமணத்தை நடத்துகின்றனர். கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் காலை 9-ல் இருந்து 9.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

www.maduraimeenakshi.org. என்ற இணையதளத்தில் இதனை காணலாம். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள், தங்கையின் திருக்கல்யாணத்தில் தாரை வார்த்து கொடுக்கும் சடங்கு இல்லாமல் வரலாற்றில் முதல்முறையாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *