Veppilai magimaigal

நம் வீட்டில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வாசலில் மாவிலையில் தோரணம் கட்டுவதை பார்திருப்போம். இந்த தோரணத்துடன் ஒரு கொத்து வேப்பிலையும் வாசலில் சொருகி வைப்பது நமது மரபு. இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? 

மாவிலை தோரணம் கட்டியிருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபவிசேஷம்ன்னு ஊரார் தெரிஞ்சுப்பாங்க. வேப்பிலை சொருகி இருந்தால் அந்த வீட்டில் அம்மை நோய் தாக்கி இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு சுத்தபத்தமா அந்த பக்கம் போவாங்க.

மாவிலையில் லட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம். மாவிலை நேர்மறையான எண்ணத்தை உண்டாக்க வல்லது. காற்றிலிருக்கும் கார்பன் -டை-ஆக்சைடையும், வேப்பிலை காற்றிலிருக்கும் நஞ்சையும் உறிஞ்சும் சக்தி கொண்டது.

இந்த இரு இலைகளுமே எப்போதுமே, எந்த காலக்கட்டத்திலும், அழுகிபோவதில்லை. இலை துளிர்த்து, முதிர்ந்து, காய்ந்து, சருகாகி மக்கித்தான் போகுமே தவிர பாதியிலேயே அழுகிப்போகாது.

அதுமாதிரியே, மனுசப்பிறவியும் தங்கள் வாழ்க்கையினை முழுசா வாழ்ந்து முடிக்கனும். வாழும் காலத்திலும், தன் காலத்திற்கு பிறகும் மற்றவர்களுக்கு பிரயோசனமா இருக்கனும்ன்னு உணர்த்தத்தான் வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவதன் காரணம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *