Poocheridhal vizha

நாகை ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோவில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ தட்டு ஏந்தி அம்மனுக்கு பூதூவி அபிஷேகம் நடைபெற்றது. 

நாகை  ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதாய் மூகாம்பிகை கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது.

 நாகப்பட்டினம் துறைமுகம் அருகே உள்ள அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழா ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அம்மனுக்கு பூ தட்டு  ஏந்தி தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்ததும் அங்கு அம்மனுக்கு பூ தூவி அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர்.  

மூகாம்பிகை கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வரும் 9 ம் தேதி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறவுள்ளது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *