Siva rathiri Poojai Palangal

சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்தில்  அதாவது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டத்தில்  பூஜைகள் நடைபெறும். 

முதல் ஜாம பூஜை…  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 
இரண்டாம் ஜாம பூஜை…. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 
மூன்றாம் ஜாம பூஜை…. நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை
நான்காம் ஜாம பூஜை…. முற்பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை

முதல் ஜாமம்
 முதல் ஜாம பூஜையில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்தால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். 

இரண்டாம் ஜாமம்
இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். 

மூன்றாம் ஜாமம்
மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டால்  இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

நான்காம் ஜாமம்
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டால்  நம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *