Thirupparakundram Koyil Undiyal Kanikkai

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உண்டியல்கள் எண்ணிக்கைரூபாய் 18 லட்சத்து 64 ஆயிரத்து 180 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.

 

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் சட்டபட்ட காணிக்கை மூலம் நிரம்பியதை தொடர்ந்து உண்டியல்கள் எண்ணும் பணி கோவில் நிர்வாக அலுவலர் துரைப்பாண்டி. பேஷ்கார் தேவிகா மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வருவாய் 18 லட்சத்து 61 ஆயிரத்து 380 ரூபாயய் பணமாகவும், 175 கிராம் தங்கமும், ஒரு கிலோ 240 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

 

உண்டியல்கள் எண்ணும் பணியில் பொதுமக்கள், பக்தர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *