Dhanvantri Peedam Homam

365 ஹோமத்தின் இரண்டாவது நாளாக அஷ்டாக்ஷரி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று 02.01.2020 வியாழக்கிழமை அஷ்டாக்ஷரி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், பல்வேறு நன்மைகள் பெறவும், பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளன நாளை 03.01.2020 வெள்ளிக்கிழமை உலக க்ஷேமம் மற்றும் அனைவரும் சுபிக்ஷம் பெற சப்தநதி ஹோமம் நடைபெற உள்ளது.   

இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *