Thiruvoona Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 08.10.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தை முன்னிட்டு திருவோண ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரி தைலாபிஷேகம், மற்றும் திருவோண நக்ஷத்திர விருட்ச பூஜை நடைபெற உள்ளது.

மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. திருவோண நக்ஷத்திரதன்று பெருமாளை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும். வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும், வசதிகள் பெருகும், செல்வ வளம் பெருகும். மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. மேலும் நக்ஷத்திர தோஷங்கள் நிவர்த்தியாகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் நடைபெறும் ஹோமத்திலும், அபிஷேக ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *