Thiruchendur pacchai sathi

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளில் காலை சுவாமி சண்முகப் பெருமான் , பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி திருவீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெற்று, காலை 10.30 மணியளவில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மனும் புதன்கிழமை பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை (ஆக. 29)  நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *