Thirupathy Dharshan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். ஆம் உரிய ஆவணங்கள் இருந்தால் இது சாத்தியம் தான். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் முறை இருக்கிறது.  

இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால் 2 மணி நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கும் முறை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

திருப்பதி மற்றும் திருமலையில்  அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து பயோ மெட்ரிக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *