Madurai chitirai thiruvizha

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 19-ந் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார். 

சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்…. 

ஏப்ரல் 4 –  மீனாட்சி- சுந்தரேசுவர் கோவிலில் வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு 

ஏப்ரல் 8 – காலை 10.05 மணியில் இருந்து 10.29 மணிக்குள் கொடியேற்றம் 

ஏப்ரல் 9 – தங்க சப்பர வாகனம், பூத அன்ன வாகனம்

ஏப்ரல் – 10 தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் –  11 தங்கப் பல்லக்கு வாகனம்

ஏப்ரல் – 12 தங்க சப்பர வாகனம், தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் – 13 தங்கம், வெள்ளி ரி‌ஷப வாகனம்

ஏப்ரல் –  14 சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம்

ஏப்ரல் – 15 பட்டாபிஷேகம்

ஏப்ரல் – 16 திக்கு விஜயம் 

ஏப்ரல் – 17 சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 

ஏப்ரல் – 17 இரவு 8 மணிக்கு கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக் கில் வீதி உலா 

ஏப்ரல் – 18 காலை 5.45 மணிக்கு சுவாமி-அம்மன் தேரோட்டம் நடக்கிறது

 ஏப்ரல் – 19 தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரி‌ஷப வாகனத்தில்புறப்பாடு … சித் திரை திருவிழா நிறைவு.

அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா…. 

ஏப்ரல் 15 அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு  எழுந்தருளுகிறார்.

ஏப்ரல் 17 கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.

ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு மதுரை மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை

ஏப்ரல் 19 கள்ளழகர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுகிறார்.

ஏப்ரல் 20 ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சி

ஏப்ரல் 21 இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணம் 

ஏப்ரல் 22 கள்ளழகர்  பூப்பல்லக்கில் புறப்பட்டு

 ஏப்ரல் 23 அழகர் கோவிலை சென்றடைகிறார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *