Subramaniya swamy Palabishegam

பூவிருந்தவல்லி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று முருகப்பெருமானுக்கு பால்  அபிஷேகம் செய்தனர்.

 சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா  வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் நிற சேலை அணிந்து பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

முன்னதாக பண்ணையத்தம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க  ஆலயத்தை வந்தடைந்தது.பின்னர் முருக பெருமாளுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *