srirangam-koiyilil-thiruvadi-sevai

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வரும் 12 ஆம் தேதி (12/10/18) திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கோயிலின் இணை ஆணையர் பொ. ஜெயராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் சாற்றுமறை முடிந்து, பெரியபெருமாள் திருமேனி முழுவதும் தைலம் சாற்றப் பெற்றது.

தற்போது பெரியபெருமாள் திருமேனி தைலக்காப்பு முழுவதும் நன்குகாய்ந்துவிட்டதால், அக்டோபர் 12 ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) புணுகு காப்பு சாற்றி, கவசங்கள் மற்றும் அலங்காரம் செய்வித்து, பிற்பகல் 3.30 மணி முதல் திருவடி சேவை செய்விக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் திருவடி சேவையைத் தரிசிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *