periya-sesha-vagaanathi-veedhi-ula

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் வைத்தப்படி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்பித்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த முதல்வர் சந்திரபாபுநாயுடு தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2019 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 8 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் ( ஆதி சேஷன் ) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.வீதிஉலாவில் போது நான்கு மாடவீதியில் இருப்புறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்க கற்பூர ஆரத்தி எடுத்தும் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதிஉலாவிற்கு முன்னதாக இந்து தர்ம பிரச்சார பர்ஷித், அன்னமாச்சார்யா, தசா சகீத்திய திட்டத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடிய படியும் பஜனைகள் செய்தும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *