vellore-kerala-makalukaaga-sirapu-homam

வேலூர் வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை கேரள மாநில மக்களின் நலன் கருதி சிறப்பு ஹோமங்கள் – கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள கேரள மாநில மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று நடத்தும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனி ஆலயம் அமைத்துள்ளார்.

அத்தகைய சிறப்புமிக்க கார்த்தவீர்யார்ஜுன்க்கு ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் இழந்த பொருட்களை திரும்ப கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப் பட்ட கேரள மாநில மக்கள் துயரத்திலிருந்து விலகவும், இயற்கையின் சீற்றம் குறையவும், நோய்கள் வராமல் இருக்கவும், நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபடவும், மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், இழந்தவைகளை பெறவும் தேவைகள் பூர்த்தி அடையவும், சுகாதாரம், தூய்மை, இயற்கை வளம் மற்றும் செல்வ செழிப்புளுடன் வாழவும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.08.2018 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 2.00 மணி வரை ஹோமம் நடைபெறுகிறது.    இந்த ஹோமத்தில் பங்கேற்று இறைவனின் அருளைப் பெற எண்ணற்ற மக்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *