pazhani-malaikovilil-bakthargal-kootam

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக திகழ்கிறது பழனி. இங்கு ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகைபுரிவர். இதேபோல் விடுமுறை தினங்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எண்ணிலடங்கா பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணமிருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *