sri-villiputhur-aandaal-indru-sesha-vaaganathil-bavani

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருஆடிப்பூர திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி அன்றைய இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா சென்றனர். தொடர்ந்து 16-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. இந்த நாட்களில் ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி விழாவின் முக்கிய நாளான இன்று ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்த்தன கிரியிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளின் அருளைப் பெற எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைப் புரிந்துள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *