kalaikattavirukum-aadi-pathinettam-vizhaa

தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் நதிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு ஆகியவைகளை வைத்து தண்ணீருக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறை அணிந்து கொள்வார்கள். இது போல புது மண தம்பதியர் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றி திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வதை ஐதீகமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக விமர்சியாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றிலும் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *