thirupathi-bramotsavathirku-sirapu-perundhu-yerpaadu

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவத்திற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 35 புதிய சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் அச்சம்நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்குள் மேலும் 130 பேருந்துகள் புதிதாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் நாடு முழுவதும் இருந்து பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்கு புதிதாக இந்த ஆண்டு 165 பேருந்துகள் மூலமாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு போக்குவரத்தில் எந்தவித சிரமமும் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *