2018-04-02-08-28-25

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் , 11வது பட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள் (84), கடந்த, 19ம் தேதி திருநாட்டை அலங்கரித்தார் (காலமானார்). மறுநாள், ஸ்ரீரங்கம் பெரியாஸ்மரத்தில் அவரது உடல் திருப்புட்குழி புகுந்தது (நல்லடக்கம் செய்யப்பட்டது).
தனக்கு பிறகு, 12வது பட்டத்திற்கு வர வேண்டிய, மூன்று பேர்களின் பெயர்களை மறைந்த ஆண்டவன் ஸ்வாமிகள் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து, 12வது பட்டமாக வெள்ளியனூர் நாராயணச்சாரியரை புதிய ஆச்சாரியராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும், வெள்ளியனூர் நாராயணாச்சாரியர் விரைவில் பட்டமேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணச்சாரியார் பூர்வாசிரமத்தில், சின்னாண்டவன் திருக்குடந்தை ஸ்வாமிகளின் கொள்ளுப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *