2017-11-25-14-33-21

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயமாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருப்பதியில் நாள் தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக காணப்படும். கூட்டம் அதிகம் இருக்கும் காலங்களில் ஏழுமலையானை தரிசிக்க 1 நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே பக்தர்களின் வசதிக்காக சாமி தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருக்கட்டமாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம் என்றும் இலவச தரிசனத்துக்கு வருவோர் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம் வழியாக பக்கதர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆதார் மூலம் தரிசனம் முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *