2017-11-13-10-21-42

காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்சம் வில்வார்ச்சனை மற்றும் குங்குமார்ச்சனை சேவை சிறப்பாக நடைபெறுகிறது. காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இம்மாதம் 8-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை லட்சம் வில்வார்ச்சனை மற்றும் குங்குமார்ச்சனை சேவை நடக்க உள்ளது. தினசரி காலை 6, 7, 10 மற்றும் மாலை 4 மணி என நான்கு முறை கோயில் வளாகத்தில் உள்ள சிவன், அம்மன் அலங்கார மண்டபத்தில் இச்சேவைகள் நடக்க உள்ளன. இதில், ரூ. 200 செலுத்தி இருவர் பங்கு கொள்ளலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் பக்தர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசீர்வாத சேவையையும் கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் ரூ. 500 செலுத்தி பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கை, 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *