Tag: Vazhipadu

  • Vinayagar vazhipadu

    முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார்.  இதற்காக வெறும் ஒரு ரூபாயை வைத்தே அந்த விநாயகப்பெருமானை ஏமாற்றி விடாதீர்கள். அவருக்குப் பிடித்த மற்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும். விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    எந்தெந்த பொருட்களை புதன்கிழமை அன்று வினாயகரிற்கு வாங்கி கொடுத்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைத்து, முட்டிமோதி ஒரு தொழிலை ஆரம்பித்து இருப்போம். ஆனால் அதில் முன்னேற்றமே இருக்காது.

    ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றங்கள் இருக்காது. தேவையற்ற நபர்களால் பிரச்சனை வரும். சம்பள உயர்வு இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது. கொடுத்த கடன் திரும்பி வராது. இப்படி நம்முடைய வருமானத்தை தடுக்கும் தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். அடுத்ததாக ஈட்டிய செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம்.

    வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது. அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. இதேபோல் உங்களது வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினம்தோறும் இரண்டு ஏலக்காயை நைவேத்தியமாக படைத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று. 

  • Somavara vazhipadu

    வாரங்களில் திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பெருஞ் சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.

    சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

    இந்த நல்ல நாளில் சிவபெருமான் நாமத்தை உச்சரித்து மாலை வேளையில் சிவாலயம் சென்று சிவனை தரிசித்தால். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மனதில் சந்தோஷம் நிலவும். சவாலயம் செல்ல இயலாதவர்கள். வீட்டிலேயே சிவப்பெருமான் படத்திற்கு பூஜை செய்து வணங்கினால். சிவனின் பூரண ஆசிர்வாதம் கிட்டும்.
     

  • Kula deiva vazhipadu

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  

    ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

    குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  

    அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.
     

  • Narasimmar vazhipadu

    நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் 7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

     ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

     நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். 

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

     நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

    நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.
     

  • Ugadhi Vazhipadu Murai

    காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. 

    இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். 

    ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம். 

    வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

    யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். 

    எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 

  • hanuman vazhipadu

    எளிமையாக வணங்கக்கூடிய கடவுள்களில் முதன்மையானவர் ஹனுமன்.  அதே நேரத்தில்  மனதில் எந்த அழுக்கும் இல்லாமல் வழிபட்டால் தான் அவரது ஆசியை பெற முடியும். 

    ஹனுமனிற்கு பிடித்தமான படையல் என்பது வெல்லம் மற்றும் வறுத்த கடலைதான். மேலும் அவருக்கு கோதுமை மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்பட்ட உணவையும் படைத்து வழிபடலாம். இதன் மூலம் அனுமனின் ஆசியை பெற முடியும். 

    தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு மற்ற கடமைகளை எல்லாம் முடித்து விட்டு அருகில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று வரலாம். அருகில் ஹனுமன் கோவில் இல்லை என்றால் வீட்டிலேயே சிறிய அனுமன் சிலைக்கோ அல்லது படத்திற்கோ செந்தூரம், பூக்கள், வெல்லம், ஆகியவற்றை வைத்து பஞ்சோப்சாரம் செய்யலாம். இதன் மூலமும் ஹனுமனின் ஆசியை பெறலாம். 

    ஹனுமனின் உருவரும் 5 வகைகளாக வணங்கப்படுகிறது அதனால் நீங்கள் பஞ்சமுக ஹனுமனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயையும், வெல்லத்தையும் நெற்றியில் இட்டுக்கொண்டால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.

    தினமும் நீங்கள் மற்ற கடவுள்களை வணங்கும்படியே ஹனுமனது மந்திரத்தையும் தினமும் சொல்ல வேண்டும். நீங்கள் நேரடியா ராமனை வணங்குவது மூலமும் அனுமனின் அருளை பெறலாம். தினமும் 108 முதலை ராமஜெயத்தை ருத்ராட்சங்கள் கொண்டு சொல்வது மூலம் அதிஷ்டங்கள் உங்களை தேடி வரும்.
     

  • Sri Biravar Arulasi Pera Vazhipadu

    ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இதனை பின்பற்றி பாருங்கள்.

    தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் சன்னிதானத்திற்கு செல்லுங்கள். 

    இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

    பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், பிரசாதத்தில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள்.

    அடுத்த சில மணித்துளிகள், நாட்கள், வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.