Tag: Thiruvannamalai

  • Thiruvannamalai Girivalam Sirappugal

    நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை, உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராக திகழும் தலமாகும். பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. 

    அருணன் என்றால் சூரியன் – நெருப்பின் நிறமான சிவப்பை குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருளாகும். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

    மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேஷமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள். 

  • Thiruvannamalai Barani Deepam

    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    தொடர்ந்து மாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர், சுவாமி சன்னதியில் இருந்து ஆடி அசைந்தபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் முடிந்த உடன், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    அதே நேரத்தில், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையில் சுமார் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கிரிவலப்பாதையில் காத்திருக்கும் பக்தர்கள் மலையின் மீது ஏற்றப்பட்டுள்ள மீகா தீபத்தை வணங்குவார்கள். 

    மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர், நாளை இரவு தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். மகாதீபத்தை தொடர்ந்து அய்யங்குளத்தில் 4 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவதோடு கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடையும்.
     

  • Thiruvannamalai car festival

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று மகா தேரோட்டம் ஆனது நடைபெற்றது. .

    இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் தேர் என்னும் மகாரதம் தேரோட்டத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-வது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் ஊர்வலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.  மதியம் 2 மணி அளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ஊர்வலம் வந்தது.

    மகா ரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. தேர் திருவிழாவை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய இடங்களில் சி.சி.டிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
     

  • TV Malai Apoorva Nigazhvu

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளுள் ஒன்று. அந்த அற்புதக் காட்சியைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.

    கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் பல நூறு லிட்டர் நெய்யில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இது உலகத்துக்கு வளத்தையும் ஒளியையும் வழங்கும் நிகழ்வு. அந்த நாளில், இறைவன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருப்பார்.
    மகா தீபம் ஏற்றியதும் பக்தர்களுக்கு காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஐந்தே நிமிடங்களில் உடனடியாக பிரகாரத்துக்குள் குடியேறிவிடுவார்.

    இந்த அதிசயக் காட்சி அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். இப்படி இறைவன் காட்சியளிப்பதற்கு ஒரு புராண காரணம் கூறப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் என அத்தனைபேரும் சிவபெருமானை மட்டுமே சுற்றி, வழிபட்டு வந்துகொண்டிருந்த போது, பார்வதி சிவன் மீது மிகுந்த கோபம் கொண்டாராம்.

    அதனால் சிவனும் சக்தியும் ஒன்று தான், ஆணும் பெண்ணும் சமம் தான், அவர்களுக்குள் வேறுபாடு எதுவும் கிடையாது என சக்திக்கும் தன்னுடைய பக்தர்களுக்கும் ஒருசேர உணர்த்தவே சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோலம் பூண்டு, சக்தியை மகிழ்வித்ததாக, புராணங்கள் குறிப்பிடுகின்றன.
     

  • Thiruvannamalai Gold Gift

    திருவண்ணாமலை மகா தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயம், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். விழா காலங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், துணி, சணல் பைகளை மக்களிடம் ஊக்குவிக்கவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     

  • Thiruvannamalai Karthigai Deepam

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். 

    இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னிட்டு  7-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீப விழா வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

  • Thiruvannamalai Maha Deepam

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு  துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற இருக்கிறது. 

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகாதீப திருவிழா டிசம்பர் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி முன்னிட்டு வியாழக்கிழமை துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு சுமார் 8.30 மணியளவில் துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.

    நாளை மறுநாள் பிடாரியம்மன் உற்சவம் நடக்கிறது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. 30-ந்தேதி விநாயகர் உற்சவம் நடக்கிறது. அப்போது விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர்.

    1-ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக 14-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். 

  • Thiruvannamalai Aani Bramorchavam

    சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 8 ஆம் தேதி ஆனி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் பிரம்மோற்சவ விழா வரும் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. பிரம்மோற்ஸவத்தை ஒட்டி ஜூலை 7 விநாயகர் உத்ஸவம் நடைபெறுகிறது.

    ஜூலை 8  ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட உற்சவ சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.  ஜூலை 17-ஆம் தேதி 10 நாள் ஆனி பிரம்மோத்ஸவம் நிறைவு பெறுகிறது.