அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.
கிரிவலம்: பக்தர்கள் செலுத்திய உண்டியல் தொகை எவ்வளவு தெரியுமா?
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தை மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.2 கோடியே 90 லட்சம் ரொக்க பணமும், 154 கிராம் தங்கமும், 1242 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.3 கோடியே 15 லட்சம் ரொக்க பணமும், 210 கிராம் தங்கமும், 1695 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மகா தீபத்தை யொட்டி வருகிற டிசம்பர் ஆறாம் தேதி மலை ஏறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, அதன்படி தீபத்திருநாளான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று அனுமதி பெற்ற 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். காலை 06.00 மணி முதல் மதியம் 2 மணிக்குள் அனுமதி பெற்ற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.
டிசம்பர் 6 ஆம் தேதி அன்று காலை காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை படி அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி சீட்டு பெற பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும், பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி இல்லை.
மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மேலும் கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கிரிவலம் மீதான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்தது.
இந்நிலையில் தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சயிர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பவுர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்லலாம்.
மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என தெரிவித்துள்ளார். கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முன்னதாக மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக பிரம்மாண்ட கொப்பரை நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
தீபத்திருவிழாவின் 10ஆம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து சரியாக மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டது எங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றினர். கோவில்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டதை அடுத்து ஒளி வெள்ளம் பரவியது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன. 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி இன்றைய தினம் உள்ளூர் பக்தர்கள் வெளியூர் பக்தர்கள் என 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்திரலிங்கம்: கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அக்னி லிங்கம்: இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
எமலிங்கம்: கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
நிருதிலிங்கம்: மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வருணலிங்கம்: ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
வாயுலிங்கம்: இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
குபேரலிங்கம்: 7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
ஈசான்யலிங்கம்: கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.
கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரை தரிசித்து அனுமதி பெற வேண்டும்.
அவர்தான் அங்கு காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன்பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.
அதன்பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத்தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதியாகும். கிரிவலப் பாதை ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோவில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்விகப்பாதை ஆகும்.
நிறைமாத கர்ப்பிணிப் பெண் எப்படி அமைதியாக, ஆனந்தமாக, வயிற்றிலிருக்கும் குழந்தையை மட்டும் நினைத்து நடந்து செல்வாளோ, அதேபோன்றுதான் நாமும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து, அவருடைய திருப்பெயரை உச்சரித்து, பொறுமையாகவும், பக்தியுடனும் நடந்து செல்லவேண்டும்.
கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். கிரிவலம் செல்லும்போது எறும்பு புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவிட்ட புண்ணியம் கிடைக்கும்.
கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள்தாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதி சிறப்பு உண்டு என்று ஞானிகளும், யோகிகளும் கூறியிருக்கிறார்கள். ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். `வலம் வர வேண்டும்’ என்று நினைத்த மாத்திரத்தில் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…
ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும் .
திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .
புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.
சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.