Tag: Slogam

  • Lakshmi narasimar slogam

    அணைத்து விதமான கஷ்டங்கள் விலக மாலை வேளையில் உச்சரிக்க வேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய நகாய ச 

    மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    மேலும் வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை மனதார உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த பிரார்த்தனையின் போது அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.
     

  • perumal slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
     

  • Slogam

    இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

    இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல… நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

    ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

    அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
    லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
    ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
    யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
     

  • Vetri tharum Slogam

    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
     

  • Flower poojai slogam

    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ… அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
     

  • Sagala Gnanam Tharum Slogam

    கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

    எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!

    வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!
    ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
    ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

    இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.
     

  • Iyappa Slogam

    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
     

  • Guru Bagavan Slogam

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம் தம் நமமி பிருகஸ்பதிம்

    பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

    திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். 
     

  • Ganapathy Slogam

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    ஸ்லோகத்தின் பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

  • Pradhosha Neerathi Slogam

    பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

    பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்
    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
    ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
    இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
    ஓம் நம சிவாய