Tag: Sabarimalai

  • Sabarimalai 18 Padigal

    ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்

    மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்

    ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்

    ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்

    எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்

    பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்

    பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்

    பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்

    பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்

    பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்

    பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்

    பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்

    பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

  • Sabarimalai maalai anindhu varubavargal

    சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

    சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

    மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு.இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

    நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள். பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள். அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம். அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும். ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

  • Sabarimalai online booking

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.

    தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும், ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை போலீஸ் இணையதளத்தில் இருந்த இந்த முன்பதிவு கேரள ஐகோர்ட் உத்தரவின் படி தற்போது தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. மண்டல காலத்தில் தினமும் ஆறு 'சிலாட்'களில் தலா 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இவர்களுடன் நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் சன்னிதானம் வரலாம். இதனால் மண்டல காலத்தில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

     

  • magara vilakku poojai sabarimalai

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

    மண்டல பூஜை காலத்தில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 85 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 

    மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 31-ந்தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
     

  • Sabarimalai 2036 padi poojai niraivu

    கேரளாவில் உள்ள சபரிமலையில் பிரபலமான படி பூஜையில் கலந்து கொள்ள 2036ம் ஆண்டு வரைக்கும் முன்பதிவு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு சென்று வழிபடுவது வழக்கம். கொரோனா குறைந்துள்ள நிலையில் 45 ஆயிரம் பக்தர்கள் தினசரி ஐயப்பனை வழிபட சபரிமலை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

    இதுதவிர ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடாக படிபூஜை இருந்து வருகிறது. மாலை நேரத்தில் சன்னிதானம் செல்லும் 18 படிகளிலும் விளக்கேற்றி செய்யப்படும் வழிபாடு இது. இந்த வழிபாட்டை காண சிலருக்கு மட்டுமே முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    படிபூஜையை காண முன்பதிவு செய்ய ரூ.40 ஆயிரம் வசூல் செய்யப்படும் நிலையில் அடுத்த 2036ம் ஆண்டு வரை படிபூஜைக்கு பலர் முன்பதிவு செய்துள்ளதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • sabarimalai thathuvangal

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர். குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
     

  • sabarimalai thathuvam

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும். அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர். சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
     

  • sabarimalai 18 padigal

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.
     

  • sabarimalai bakthargal kavanathruku

    சபரிமலைக்கு ஆண்டுதோறும் மாலையணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.  நாடி வரும் பக்தர்களுக்குக் கோடி நன்மைகளை வாரி வழங்குபவர் அன்னதானப் பிரபு, அச்சன் கோயில் அரசன், ஐயப்ப சுவாமி.  ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளிலிருந்தே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது ஐயப்ப பக்தர்களின் வழக்கம்.

    ஐயப்பனை தரிசிக்க கன்னிசாமிகள் தொடங்கி, பல வருடங்களாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் குருசாமிகள் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணியத் தொடங்கியுள்ளனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம் .

    சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக முத்திரை மாலையான 108 மணிகள் கொண்ட துளசிமணி மாலையை வாங்கி, ஏதேனும் ஒரு கோயிலில், குருஸ்வாமியின் திருக்கரங்களால், அணிந்து கொள்ள வேண்டும்.

    குருஸ்வாமி இல்லாத  பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து மாலை அணிந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். அணியும் முன், அந்த மாலையை, பூஜையறையில் புனிதமான  பசும்பாலில் அமிழ்த்தி ஊறவைக்க வேண்டும். சபரிமலைக்கு மாலை அணிந்துகொள்ளும் சாமிகள் கறுப்பு நிற. அரைஞாண் கயிறு, கையிலும் கழுத்திலும் கறுப்பு நிறக் கயிறு  ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 

    கறுப்பு, நீலம், காவி, பச்சைநிறத்தில் அமைந்த மேல் ஆடைகளையும் வேஷ்டிகளையும் உடுத்தலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள். ஐயப்பனை மனதார நினைத்து, மாலை அணிந்த பின் 48 நாட்கள் கடுமையான பிரம்மசர்ய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம் என்பதால், தினமும் காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, 'ஐயப்பன் அஷ்டோத்ரம்' படித்துவர வேண்டும். 

    வீட்டின் அருகில் நடக்கும் ஐயப்ப பூஜைகளில் கலந்துகொண்டு  சேவை செய்யலாம். 'அன்னதானம்' தரும் நிகழ்வுகளிலும் ஐயப்பமார்கள் உதவி செய்வது நல்லதொரு பாக்கியம். மாலை அணிந்த எந்த பக்தர்கள் வீட்டிலும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் தரும் பட்சத்தில் சாப்பிடலாம். விரத காலத்தின்போது குடிப்பழக்கம், செருப்பு அணிவது, அசைவம் உண்ணுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புகைப்பிடித்தல், சவரம் செய்வது, முடிவெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவரின் இறப்பு, வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்வுகளில்  மாலை அணிந்தவர்களும், மாலை அணிந்தவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களும் கலந்துகொள்ளக் கூடாது. 

    இரவில் தூங்கும்போது மெத்தை, தலையணைகளைப் பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் தூங்கக் கூடாது.  கன்னிசாமிகள் மலைக்குக் கிளம்பும்போது, அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜைசெய்து, ஏழைகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனிதரூபத்தில் கலந்துகொள்வார் என்பது ஐதீகம்.  

    ஒரு மண்டலம் முடித்து, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், தங்களின் குருசாமியின் தலைமையில் ஏதேனும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து, ஐயப்பனை வணங்கி இருமுடிகட்டிக்கொண்டு மலைக்குக் கிளம்பலாம்.  சபரிமலைக்குக் கிளம்பிச்செல்கையில், எரிமேலியில் 'பேட்டைத்துள்ளல்',  பம்பையில் விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, அன்னதானம் கொடுக்கும் பணிகளில் கன்னிசாமிகள் தவறாமல் பங்குகொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால் அய்யன் அருள்  உண்டு என்றும்! பயம் ஒருபோதும் இல்லை.  தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பின் இருமுடிக்கு பூஜை செய்து அதன் பிறகுதான் மாலை கழற்ற வேண்டும். இடையிலேயே கழற்றக்கூடாது. 

  • Sabarimalai 18 padi poojai

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.