அக்டோபர் 14 – பிரதோஷம்
சார்வரி வருடம் – புரட்டாசி 28
பிரதோஷம்
14-அக்-2020 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 8.38
நட்சத்திரம் : பூரம் மா 6.51
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: Pradhosham
-
October 14 Pradhosham
-
September 15 pradhosham
செப்டம்பர் 15 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஆவணி 30
பிரதோஷம்
திருச்செந்தூர் முருகன் தேர்
15-செப்-2020 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 9.13
நட்சத்திரம் : ஆயில்யம் ப 1.05
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
August 30 Pradhosham
ஆகஸ்ட் 30 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஆவணி 14
பிரதோஷம்
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
மொகரம், விருதுநகர் சிவன் தேர்
30-ஆக-2020 ஞாயிறு மொகரம்10
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 10.00
நட்சத்திரம் : உத்திராடம் மா 4.05
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Varumai Pokkum Pradhosham
சிவனுக்குரிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியும், பிரதோஷமும். பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன் உண்டு, தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்த வேளையே பிரதோஷ வேளை.ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.
சனி பிரதோஷம் அன்று ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு இன்னும் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று ,நாள் முழுக்க விரதம் இருந்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில் , சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.
ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
பிரதோஷத்தின் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்பது ஈசனின் அருளை பெற உதவும்.
பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம், நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.
-
August 16 Pradhosham
ஆகஸ்ட் 16 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஆடி 32
பிரதோஷம்
16-ஆக-2020 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி ப 12.01
நட்சத்திரம் : புனர்பூசம் முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
viradham thodanga ugandha sani pradhosham
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.
பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.
தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும். சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.
கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள். பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.
பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.
பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம். பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.
-
pradhosham Poojai
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.
1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் – பல வளமும் உண்டாகும்
3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
6. நெய் – முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் – சுகவாழ்வு
10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
-
Thanjai Periya Koil Pradhosham
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில் பக்தர்கள் இல்லாத ஆறாவது பிரதோஷம் நடைபெற்றது. 13 அடி உயர மகாநந்தி பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் பக்தர் களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உலகில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது கொரோணா காலத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் ஆறாவது பிரதோஷம் இதுவாகும்.
-
June 18 Pradhosham
ஜூன் 18 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஆனி 4
பிரதோஷம்
18-ஜூன்-2020 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 10.28
நட்சத்திரம் : பரணி கா 9.34
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Somavara pradhosham
பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில் அயர்ச்சியில் பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். பிரதோஷ கால நடனம் பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம்.
சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினம். அதிலும், பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும். மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.
சிவ தாண்டவ தரிசனம் சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.