அக்டோபர் 18 – பிரதோஷம்
பிலவ வருடம் – ஐப்பசி 1
பிரதோஷம்
18-அக்-2021 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 7.26
நட்சத்திரம் : பூரட்டாதி ம 12.54
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Pradhosham
-
October 18 Pradhosham
-
October 4 2021 Pradhosham
அக்டோபர் 4 – பிரதோஷம்
பிலவ வருடம் – புரட்டாசி 18
பிரதோஷம்
04-அக்-2021 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 8.08
நட்சத்திரம் : பூரம் ந.இ 2.41
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
September 18 2021 Pradhosham
செப்டம்பர் 18 – பிரதோஷம்
பிலவ வருடம் – புரட்டாசி 2
மகா பிரதோஷம்,குச்சனூர் சனிபகவான் ஆராதனை
18-செப்-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.45
நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 5.35
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Sani pradhosham
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் 16.30 முதல் 18.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
சனி பிரதோஷ சிறப்பு :
சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :
பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – வளம் உண்டாகும்.
தேன் – இனிய சாரீரம் கிட்டும்.
பழங்கள் – விளைச்சல் பெருகும்.
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.
நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் – சுகவாழ்வு.
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
-
Sani pradhosham magimaigal
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.
பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
-
September 4 maha pradhosham
செப்டம்பர் 4 – மகா பிரதோஷம்
பிலவ வருடம் – ஆவணி 19
பிரதோஷம்
மகா பிரதோஷம்
04-செப்-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.42
நட்சத்திரம் : பூசம் மா 6.00
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
July 21 2021 Pradhosham
ஜூலை 21 – பிரதோஷம்
பிலவ வருடம் – ஆடி 5
பிரதோஷம் பிரதோஷம்
சங்கரன் கோவில் கோமதி அம்மன் தேர்
21-ஜூலை-2021 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவாதசி ம 2.57
நட்சத்திரம் : கேட்டை மா 5.39
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Pradhosham abishegam
பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பல வளமும் உண்டாகும்,
தேன் – இனிய சாரீரம் கிடைக்கும்.
பழங்கள் – விளைச்சல் பெருகும்,
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்,
நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்.
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் – சுகவாழ்வு,
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்,
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம்.
-
June22 pradhosham
ஜூன் 22 – பிரதோஷம்
பிலவ வருடம் – ஆனி 8
பிரதோஷம்
கானாடுகாத்தான் சிவன் திருக்கல்யாணம்
22-ஜூன்-2021 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.24
நட்சத்திரம் : விசாகம் ம 12.31
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
June 7 Pradhosham
ஜூன் 7 – பிரதோஷம்
பிலவ வருடம் – வைகாசி 24
பிரதோஷம்
07-ஜூன்-2021 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 11.06
நட்சத்திரம் : பரணி முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்