அக்டோபர் 25 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஐப்பசி 8
பிரதோஷம்
25-அக்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி மா 4.41
நட்சத்திரம் : பூரம் கா 9.01
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Pradhosham
-
October 25 Pradhosham
-
October 11 Pradhosham
அக்டோபர் 11 பிரதோஷம்
விகாரி வருடம் – புரட்டாசி 24
பிரதோஷம்
பெண் குழந்தைகள் தினம்
11-அக்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 11.24
நட்சத்திரம் : பூரட்டாதி முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Sukravara pradhosham poojai
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் சுக்ரவார பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற 11.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புவாய்ந்த நாளில், பிரதோஷ தினத்தில், பிரதோஷ நேரத்தில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான வரம் அருளும் ஈஸ்வரனை உடல் நலம், மன நலம் வேண்டியும், இயற்கை வளத்திற்காகவும் நாமும் பிரார்த்தனை செய்வோம். பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.
வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் ‘சுக்ர வாரப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ நாளில் நந்திதேவரையும் சிவபெருமானையும் தரிசித்து ஹோம பூஜைகளில் பங்கேற்று பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லைகள் அகலும், எல்லா நலனும் வளமும் வந்து சேரும், இல்லம் சிறக்கும், செழிக்கும், சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும், மேலும் பல நற்பலன்களை பெறலாம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சுக்கிரவார பிரதோஷ பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
-
September 26 Pradhosham
செப்டம்பர் 26 பிரதோஷம்
விகாரி வருடம் – புரட்டாசி 9
பிரதோஷம்
26-செப்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.50
நட்சத்திரம் : மகம் இ 2.41
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Pradhosha Neerathi Slogam
பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.
பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
-
August 12 Pradhosham
ஆகஸ்ட் 12 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஆடி 27
பிரதோஷம்
12-ஆக-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அதிதி
திதி நேரம் : துவாதசி ம 2.28
நட்சத்திரம் : பூராடம் அ.கா 5.18
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Somavara Pradhosham
திங்கள் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சோமவார பிரதோஷம் நடைபெறுகிறது.
பிரதோஷ காலம் :
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
சோமவார பிரதோஷம் :
பிரதோஷ நாள் அன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பாவங்கள் அனைத்தும் விலக வேண்டி பால், சந்தனம், இளநீர், விபூதி கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. அபிஷேகம் செய்து வில்வ மாலை, அருகம்புல், திராட்சை மாலை அணிவித்து வழிபாடு நடைபெற உள்ளது.
இப்பிரதோஷ பூஜையின் மூலம் திருமண தடை நீங்கும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். .ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
பிரதோஷ பூஜையை தொடர்ந்து சிவலிங்க ருபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தனி சிறப்பாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பிரதோஷ நாளில் வருகை புரிந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும், 468 சித்தர்களையும், குழந்தயானந்த ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர், அகத்தியர், மஹா அவதார பாபா, சீரடி சாயிபாபா, தங்க பாபா, ராகவேந்திரர், ஜகத்குரு காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள், குருதேவ், மஹாவீர், ரமணர், புத்தர், வீரபிரம்மங்காரு, சேஷாத்திரி ஸ்வாமிகள், வேதாந்த தேசிகர் போன்ற பல்வேறு மஹான்களையும் தரிசித்து பிறந்த பலனை அடையலாம்.
பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் – பல வளமும் உண்டாகும், தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் – விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், நெய் – முக்தி பேறு கிட்டும். இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு, சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033
-
July 29 Pradhosham
ஜூலை 29 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஆடி 13
பிரதோஷம்
29-ஜூலை-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவாதசி ம 2.42
நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 4.43
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
July 14 Pradhosham
ஜூலை 14 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஆனி 29
பிரதோஷம்
14-ஜூலை-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 2.28
நட்சத்திரம் : கேட்டை இ 7.33
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
June 30 – pradhosham
ஜூன் 30 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஆனி 15
பிரதோஷம்
30-ஜூன்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி அ.கா 4.16
நட்சத்திரம் : கார்த்திகை கா 9.08
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்