Tag: Pradhosham

  • Thanjai pradhosham

    தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை பிரதோஷ வழிபாடு….சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், அதைப் போல் சித்திரை மாத இரண்டாம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர்,பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • May 03 2023 Pradhosham

    மே 3 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – சித்திரை 20   
    பிரதோஷம்
    மதுரை மீனாட்சி தேர்
    03-மே-2023 புதன்  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி இ 11.51
    நட்சத்திரம் 11.51
    நட்சத்திரம் : அஸ்தம் இ 8.52
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • April 17 2023 Pradhosham

    ஏப்ரல் 17 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – சித்திரை 4   
    பிரதோஷம்
    17-ஏப்-2023 திங்கள்  
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திதித்துவயம்     
    திதி நேரம் : துவாதசி ம 3.14
    நட்சத்திரம் : பூரட்டாதி ந.இ 2.03
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • April 03 2023 Pradhosham

    ஏப்ரல் 3 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – பங்குனி 20   
    பிரதோஷம்
    03-ஏப்-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி கா 7.32
    நட்சத்திரம் : மகம் கா 8.20
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Friday pradhosham

    ஞாயிறு பிரதோஷம்…

    சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு  கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

    திங்கள் பிரதோஷம்…

    பிரதோஷத்தில் ஸோமவரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
     
    செவ்வாய் பிரதோஷம்…

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.  மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. இதனால் செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும்  ருனமும், ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
     
    புதன் பிரதோஷம்…

    புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
     
    வியாழன் பிரதோஷம்…

    குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
     
    வெள்ளி பிரதோஷம்…

    சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
     
    சனி மஹா பிரதோஷம்…

    எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி  நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். இதனால் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும்.  சிவ அருள் கிட்டும்.

  • Feburary 03 2023 Pradhosham

    பிப்ரவரி 3 – பிரதோஷம்   
    சுபகிருது வருடம் – தை 20   
    03-பிப்-2023 வெள்ளி  
    பிரதோஷம்   
    சுபமுகூர்த்த நாள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி இ 8.34
    நட்சத்திரம் : திருவாதிரை கா 8.9
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • January 19 2023 Pradhosham

    ஜனவரி 19  – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – தை 5   
    பிரதோஷம்
    19-ஜன-2023 வியாழன்  
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : துவாதசி கா 9.57
    நட்சத்திரம் : கேட்டை ம 12.28
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Viswanathar temple pradhosham

    ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வரர் சன்னதியில் மார்கழி பிரதோஷ விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

    இந்த மார்கழி பிரதோஷ நாளில் கோவிலுக்கு சிவனுக்கு முன்பாக அமைந்துள்ள நந்தி பகவான் மற்றும் பிரதோச உற்சவநாதருக்கு மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் , ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி மற்றும் உற்சவநாதருக்கு புஷ்பா பூ மலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கோவிலில் இருந்த திரளான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் முழுவதும் பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்து  நமச்சிவாய வாழ்க நமச்சிவாய வாழ்க என பக்தி பரவசத்துடன் முழக்கம் விட்டனர் அதன் பின்னர் கோவில் கருவறையில் இருக்கும் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வருக்கு பஞ்சஆரத்தி ,தட்டஆரத்தி கும்பஆரத்தி ஆகிய மஹா  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  • January 04 2023 Pradhosham

    ஜனவரி 4 – பிரதோஷம்
    பிலவ வருடம் – மார்கழி 20
    04-ஜன-2022 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : துவிதியை     
    திதி நேரம் : துவிதியை இ 8.42
    நட்சத்திரம் : உத்திராடம் ம 2.01
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • December 21 2022 Pradhosham

    டிசம்பர் 21 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – மார்கழி 6   
    பிரதோஷம்
    21-டிச-2022 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி இ 8.17
    நட்சத்திரம் : விசாகம் கா 6.26
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்