Tag: Poojai

  • pradhosham Poojai

    பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

     

    1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    2. தயிர் – பல வளமும் உண்டாகும்

    3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்

    4. பழங்கள் – விளைச்சல் பெருகும்

    5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

    6. நெய் – முக்தி பேறு கிட்டும்

    7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்

    8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

    9. எண்ணெய் – சுகவாழ்வு

    10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

    11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
     

  • Danvantri Arokyapeedam poojai

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 01.02.2020 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ரதசப்தமியை முன்னிட்டு அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் வேண்டியும், அரசர் வாழ்வு வேண்டியும் அஸ்வமேத பூஜை நடைபெறுகிறது.

    சுக்கிர பகவானின் ஆசியுடன் யார் ஒருவர் அஸ்வமேத பூஜை செய்கிறார்களோ அவர் மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆவார் என்பது அஸ்வமேத பூஜையின் விதியாகும். பண வன கலையை கற்று விபரீத ராஜகுபேர யோகம் உண்டாகி அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்க பெறும் பூஜையே அஸ்வமேத பூஜையாகும்.

    ராஜபோக வாழ்வு வேண்டியும், ராஜகுமாரன் அமைய வேண்டியும், இந்திர பதவியுடன் இந்திரன் போல் வாழ வேண்டியும் நடைபெறும் அஸ்வ பூஜையில் கலந்து கொண்டு ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற அன்புடன் அழைக்கிறது ஆரோக்ய பீடம்.

    அன்றைய காலத்தில் ராஜாதி ராஜாக்களும் மன்னாதி மன்னர்களும் மந்திரிகளும் வசீகர சக்தி பெறவும், மக்கள் வசியம் பெறவும், வெற்றிமேல் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும், எதிரிகளை வெல்லவும் அஸ்வமேத யாகம், அஸ்வமேத பூஜை செய்து வந்தனர்.

    தொழில் வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை மற்றும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும் குதிரை வேகத்தில் நன்மைகள் கிடைக்கவும், போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறவும், எதிர்பாராத வகையில் திடீர் அதிஷ்டம் உண்டாகவும், ஆண் சந்ததி ஏற்படவும், வம்ச விருத்தி கிடைக்கவும், சினிமா, அரசியல், பெரும் வியாபாரம், தொழில் செய்பவர்கள் மக்களின் செல்வாக்கை பெற்று நிரந்தர வெற்றியை பெறவும், வியாபார தொழில் ஜனாகர்ஷணம், தனாகர்ஷணம் ஏற்படவும், அரசியல்வாதிகள் நன்மையடையவும், நாடாளும் யோகம் பெற்று ராஜ வாழ்க்கை வாழவும், எந்த தொழில், வியாபாரத்தில் முதலிடம் பெறவும், எதிரிகளையும், சத்ருக்களையும் எதிர்கொள்ளும் வல்லமை பெறவும், சொப்ன தேவியின் அருள் கிடைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்று செல்வாக்குடன் வாழவும், மிக பெரிய கோடீஸ்வரர்களாக வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் இந்த பூஜை நடைபெறுகிறது.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த அஸ்வமேத பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    இராணிப்பேட்டை மாவட்டம். 

    தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Flower poojai slogam

    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ… அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
     

  • Pradhosha Poojai

    பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
     

  • Thirunallaru Yagasalai poojai thodangiyadhu

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது. 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜையும், தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி உள்ளது. 
     
    வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது. கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • Sivanukku Mattum Poojai Seiyalama?

    சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால் தான் மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.

    ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் அதனை கங்கை நீர் கலந்த சுத்தமான நீரில் முக்கி எடுக்க வேண்டும். கல் வடிவில் இருந்தால் அதன் மீது கங்கை நீர் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட பாலை சிவலிங்கத்திற்கு ஊற்றி பூஜை செய்யக் கூடாது. ஐஸ் பாலில் தான் பூஜை செய்ய வேண்டும்.தினசரி சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு 3 வரி சந்தன பட்டையை லிங்கத்தின் மீது பூசவும்.சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால், தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க வேண்டும்.

    வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன் கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது.

    எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய்யுங்கள்.தினமும் சிவலிங்கத்தை துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை தவறாமல் செய்தால் சிவனின் அருள் கிட்டும்