Tag: Poojai

  • Komadha poojai

    வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம்.

    பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.

    பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

    கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா பணக் கஷ்டம் நீங்கும் . ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும். ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.

    சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும். பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும். ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்கும்.
     

  • Pradhosha poojai neram

    பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • Depavali lakshmi poojai timings

    இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கும் நாள் மற்றும் தீமைக்கு நல்லது என்று தீபாவளிக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் உள்ளது. நாள் நெருங்க நெருங்க, நாம் நமது வீடுகளை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் விட்டுவிட அவற்றை அலங்கரிக்கிறோம். கடந்த காலத்தின் அனைத்து கஷ்டங்களையும் மறந்து வெளிச்சத்திற்கு அடியெடுத்து வைப்பதன் மூலம் தீபாவளி ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம் என்று நம்பப்படுகிறது.

    இந்த ஆண்டு, தீபாவளி நாளை அனுசரிக்கப்படும். தீபாவளி நாளில், செல்வத்தின் தெய்வம் என்று அறியப்படும் லக்ஷ்மி தேவிக்கு மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பஞ்சாங்கத்தின் ன் படி வெவ்வேறு லக்ஷ்மி பூஜை நேரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    லட்சுமி பூஜை முஹுர்தம் – 05:41 PM முதல் 07:43 PM வரை (சென்னை)

    காலம் – 01 மணி 56 நிமிடங்கள்

    பிரதோஷ காலம் – மாலை 05:28 மணி முதல் 08:07 மணி வரை

    விருஷப கலாம் – மாலை 05:28 மணி முதல் 07:24 மணி வரை

    அமாவாசை திதி தொடங்குகிறது – நவம்பர் 14, 2020 அன்று பிற்பகல் 02:17

    அமாவாசை திதி முடிவடைகிறது – நவம்பர் 15, 2020 அன்று காலை 10:36 மணி
     

  • Poojaiku Agadha Malargal

    அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.

    விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

    துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

    சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

    கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். 

    குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை. விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
     

  • Vinayakar Poojai Muraigal

    1. முல்லை இலை – அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. வில்வம் இலை – இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

    5. இலந்தை இலை – கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப்பெறும்.

    7. வன்னி இலை – பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

    8. நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

    10. அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    11. எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

    12. மருதம் இலை – மகப்பேறு கிட்டும்.

    13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணிவு கைவரப்பெறும்.

    14. மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

    15. தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

    16. மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

    17. அரசம் இலை – உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

    18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

    19. தாழம் இலை – செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

    20. அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

    21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
     

  • Vinayakar poojai time

    நாம் கடையில் சென்று பிள்ளையாரை வாங்க செல்லும் போது ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவேண்டும். விநாயகரை வீட்டுக்கு கொண்டு வந்ததும். வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும். கணபதி வீட்டுக்கு வந்த உடன் அவருக்கு ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி சிறிது பூ வைத்து வணங்கவும்.

    பின்னர் பிள்ளையாருக்கு சந்தன பொட்டு வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.  அவருக்கு பிடித்த அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவித்தால் நலம் 

    வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்களை செய்து படைக்கலாம்.

    எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    நாளை (22.8.20) அன்று சனிக்கிழமை, காலை 9 மணி முதல் 10.30 வரை. எனவே பூஜையைக் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளும் 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் மேற்கொள்ளலாம். மாலையில் 5 மணி முதல் 7 மணிக்குள் விநாயகருக்கு பூஜை செய்யலாம்.
     

  • Kuberan Poojai Palangal

    குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    வெள்ளிக்கிழமை காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காம, சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும். 

    அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வெச்சு, சுற்றிலும் மாவிலையைச் செருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் எல்லாத்தையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள். 

    மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்த்ரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும் ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். 

    கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும், பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்த்ரம், துதி ஆகியவற்றைக் கூறவும், எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். 

    வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும். இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் எப்போழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. 
     

  • Thulasi Poojai Seiyum Murai

    முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.

    துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். 

    தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்றும் 3 முறை கூறவும். 

    இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். அடுத்து, தேங்காய், பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள். 

    ‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ – என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.

  • Poojai kalathirku etra pookal

    நீலோற்பலமலர் எல்லா பூக்களைவிடவும் சிறந்தது என்பதை எல்லா ஆகமங்களும் தெரிவிக்கின்றன. சில ஆகமத்தில் அலரி சிறந்தது என்றும், வேறு சில ஆகமங்கள் கொக்குமந்தாரை சிறந்தது என்றும், இவ்வாறே மலைப்பூ, தாமரைப்பூ என்ற பலவிதமான பூக்களை ஒவ்வொரு ஆகமமும் சிறந்ததாகக் கூறுகிறது.

    வசந்த ருதுவாகிய சித்திரை வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்பமலர், புன்னாகமம், தருப்பை, கண்டங்கத்திரி என்றும் இவ்வகையான பூக்களால் சிவபெருமானை பூஜித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

    பாடலி புஷ்பம், நூறு இதழ்களை உடைய தாமரைப்பூ மல்லிகைப் பூக்கள் ஆகியவற்றால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி, மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சிக்க அக்கினிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.

    வருஷ ருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரை, மல்லிகை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம்.

    சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் புஷ்பங்களினால் சிவபெருமானை பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    அலரி, சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் பூக்களினால் ஹேமந்தருதுவான மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூஜை செய்தால் நூறு யாகங்கள் செய்த பலன்களை அடையலாம்.

    சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை கர்ணிகாரப் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் ஒரு சேரச் செய்தால் எத்தனை பலன் கிடைக்குமோ அத்தனை பலன்களையும் தடையில்லாமல் பெறலாம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.
     

  • Koo Poojai

    அனைத்துவித தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

    மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்ட வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

    எனவே, பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவை நீராட்டி முகத்திலும் பின்புறமும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பசுவை வலம் வந்து மும்முறை கோவந்தனம் செய்ய வேண்டும். பசுவிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை அளித்திடல் வேண்டும்.

    கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வணங்குவது சிறப்புடையது.

    “சர்வதாமதுகே- தேவி

    சர்வதீர்த்தா பிஷேபினி

    பாவனே ஸுரபிஸ்ரேஸ்டே

    தேவி-துய்யம்-நமோஸ்துதே”.