Tag: Poojai

  • karadayan nonbu poojai murai

    மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது.

    இந்தப் பூஜையை கடைபிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பழம் சாப்பிடலாம். அதிகாலை நீராடி வீட்டை தூய்மையாக அலங்கரித்து பூஜை அறையைச் சுத்தம் செய்யவும். வாசல்களை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கவும். பூஜை அறையில்  காமாட்சி அம்மனையும்,  சுவாமிபடங்களுக்கும் பூ மாலையும்  அணிவிக்க வேண்டும்.  விரதமன்று பால், தயிர் போன்ற பொருள்களை சாப்பிடக்கூடாது.

    நோன்பு அன்று செய்த அடைகளை சிறிதேனும் மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து பசுவை வலம் வந்து வணங்க வேண்டும்.  பெண்களின் விரதமும் பூஜை வழிபாடும் கணவனது நலனுக்காக  எனும்போது  இந்த காரடையான் விரதம் சிறப்பான பலனை தரும்.

  • Pradhosha poojai palangal

    பிரதோஷத்தின் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்பது ஈசனின் அருளை பெற உதவும்.

    பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம், நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.

    பிரதோஷ பூஜையின் போது  அபிஷேகத்திற்காக  நாம் தரும் ஒவ்வொரு  பொருட்களுக்கும் ஒரு  பலன் உண்டு.

    பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்

     தயிர் – பல வளங்களும் உண்டாகும்

     தேன் – இனிய சாரீரம் கிட்டும்

     பழங்கள் – விளைச்சல் பெருகும்

     பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

     நெய் – முக்தி பேறு கிட்டும்

     இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்

     சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

     எண்ணெய் – சுகவாழ்வு

     சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

     மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

    இன்று சனி பிரதோஷம் .நோய் நொடிகளின்றி, செல்வ சிறப்புடன் வாழ இந்த பிரேதாஷ நாளில் நந்திதேவரையும், எம்பெருமான் சசிசேகரனையும்  வழிபட்டு மகிழ்வோம்.

  • saraswathi poojai, vijayadhasami poojai time

    சரஸ்வதி பூஜை, விஜயதசமி, வழிபாட்டு  சுப நேரங்கள் விவரம்:-

    சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள் 4-10-2022 செவ்வாய் கிழமை, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு செய்ய உகந்த சுப நேரங்கள் விவரம்:-

    காலை 10.30 முதல் 11.00 மணி வரை,

    பகல்  12.00 முதல் 1.00 மணி வரை,

    மாலை 4.30 முதல் 6.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 8.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை தொடர்ந்து 2.30 மணி நேரமும் நல்ல நேரம், வழிபட உகந்த உத்தம நேரம் ஆகும்.

    புரட்டாசி 18 ம் நாள் 5-10-2022 புதன்கிழமை விஜயதசமி திருநாள் சுப நேரங்கள் :-

    காலை 9.00 முதல் 10.00 மணி வரை,

    பகல்  1.30 முதல் 3.00 மணி வரை,

    மாலை  4.00 முதல் 5.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 10.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 9.00 முதல் பகல் 12.00 மணி வரை வழிபாடு செய்ய உகந்த உத்தம நேரமாகும்.

  • Nellaippar koil sumangali poojai

    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது.

    ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர். 

    இந்த ஆண்டுக்கான வரலட்சுமி நோன்பு இன்றைய தினம் அனுசரிக்கப்படக்கூடிய நிலையில் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் இளைய பாரதம் அமைப்பு சார்பில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். 

    நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்ற வைபவம் நடந்தது பின்னர் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து சிறப்பு தீபாரதனையும் செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். 

    இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்

  • Thai Poosam poojai seiya ugandha neram

    பூசம் என்றாலே பலருக்கும் தைபூசம் தான் நினைவுக்கு வரும்..அதிலும் தைபூசம் என்றால் முருக பெருமான் தான் முதலில் நினைவுக்கு வருவார். அத்தகையை பூச நட்சத்திரத்தை நம்பெருமான் ஈசரோடு தொடர்புபடுத்தி ஞானசம்பந்தரும்,அப்பர் பிரானும் பாடியருளியதை காண்போம்.

    "ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே''  என்று திருநாவுக்கரச பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்.  ''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன்  உறைகின்ற இடைமருது''  என்றும், ''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த''  என்றும் #திருஞானசம்பந்த பெருமானும் போற்றி மகிழ்கின்றார்.

    மயிலாப்பூரில்  நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் ''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்.

    "நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்…பூம்பாவையே!….'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார். தேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க –   அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு  – விநாயகர் விளங்கும்  திருத்தலமும் ஆகிய – திருவலஞ்சுழியில் – திருஞானசம்பந்தப்பெருமான்  பணிந்து வணங்கும் போது – 

    ''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர் 
    வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' 

    ''பலவகையான  மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி – உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே!..'' – என்று சிவபெருமானிடம் விண்ணபிக்கும் பாடல்களை காணலாம்…

    இப்படி பெருமை மிகுந்த தைப்பூசம் திருவிழா நாளை (18-1-2022) பெளர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து இருக்கும் நேரம் காலை 5-29 முதல் 5-56 வரை தைப்பூசம் பூஜை செய்ய உகந்த நேரம்.

  • magara vilakku poojai sabarimalai

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

    மண்டல பூஜை காலத்தில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 85 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 

    மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 31-ந்தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
     

  • Sabari malai mandala poojai

    சபரிமலையில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருவிதாங்கூர் சித்திரைத்திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. தென்காசி, செங்கோட்டை வழியாக வரும் இந்த ஊர்வலம் இன்று மதியம் பம்பை வந்தடையும்.

    இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜை காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தினசரியும் பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22ஆம்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது. தங்க அங்கி இன்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடையும். சபரிமலைக்கு வரும் தங்க அங்கி அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். 

    மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனை தொடர்ந்து 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். 

    மீண்டும் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலையில் மண்டலபூஜை தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். 
     

  • saraswathi poojai kondadapaduvadhu en

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

    ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.

    வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

    இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Poojai mani adippadhu en

    துர் தேவதைகளை விரட்ட, வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக மணி அடிக்க வேண்டும். அந்த மணிக்கும் தனியாக பூஜை செய்யப்பட வேண்டும். பொதுவாக பூஜை செய்யும் போது மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அந்த மணிக்கே நாம் தினமும் பூஜை செய்ய வேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன. 

    பூஜை ஆரம்பிக்கும் முன்பு மணி அடித்தால், அதனுடைய சத்தம் கேட்டு வீட்டிலுள்ள துர் சக்திகள் வெளியே ஓடிவிடும். ஏனென்றால்ம் துர் தேவதைகளுக்கு மணி சத்தம் கேட்டால் பயம். அதனால், தான் வீட்டில் பூஜை செய்யும் போது மணி அடித்து துர் தேவைகளை முதலில் விரட்டி விட்டு அதன் பின்னர் தான் பூஜையை ஆரம்பிப்பார்கள்.

    ஒவ்வொரு நாளும் வீட்டில் பூஜை செய்யும் போது இப்படிதான் செய்ய வேண்டும். ஏனென்றால், வீட்டில் இருட்டிய பின்பு மீண்டும் துர் தேவதைகள் வீட்டிற்கு வந்து விடலாம். அப்படி இருந்தால் இருக்கட்டுமே என்று நீங்கள் கூறினால், உங்களுடைய வீட்டில் தெய்வங்கள் வராது.

    உங்களது வீட்டிற்கு தெய்வங்கள் வர வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் போது பூஜை மணி அடித்து துர் சக்திகளை வெளியேற்றிவிட்டு தான் பூஜை செய்ய வேண்டும். அதோடு மட்டுமின்றி தேவர்களையும், தேவ கணத்தினரையும் வீட்டிற்கு அழைக்கத்தான் பூஜையின் போது மணி அடிக்க வேண்டும் என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுகின்றன.

    சாமிக்கு பூஜை செய்யும் போது படையல் அல்லது நைவேத்தியம் அல்லது நிவேதனம் படைப்பது வழக்கம். நிவேதனம் என்பதற்கு அறிவித்தல் என்று பெயர். அந்த அறிவிப்பை வெளிப்படுத்துவதற்கு தான் மணி பயன்படுத்தப்படுகிறது.
     

  • Lotus flower in poojai

    பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். 

    ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. 

    பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும். முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.