Tag: Perumal

  • thirupathy perumal dharshan

    உலகில் பழமையான மலைகளில் இரண்டாம் நிலையில் உள்ள சிலாதோரணம்  இங்கு தான் உள்ளது  சங்க இலக்கியங்களில்  திருமலையானுக்கு இட்ட பெயர் வெறுங்கை வேடன்.
       
    கோவில் கட்டிய வரலாறு அறிய முடியவில்லை  ஆகாசராஜனின் தம்பி தொண்டைமான் என்கிறது தலபுராணம். சோழர் பல்லவர்  பாண்டியர் சாளுக்கியர்  விஜய நகர  மன்னர்களால்  பராமரிப்பு செய்த கல்வெட்டு உண்டு  பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகள் தான் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் ஆச்சார அனுஷ்டங்கள் முறைப்படுத்தப்பட்டது.

    மதுரை மீனாட்சி ஸ்ரீ ரங்கம் கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பில்  சூறையாடப்பட்ட போது  தென் இந்தியாவில் தப்பிய கோவில் இது மட்டுமே  (இதன் பிண்ணனியில் ஒரு செவிவழி கதை  மலைமீது என்ன கோவில் என்ற போது வராகர் என்பதை பன்றி கோவில் என்றதால்   இஸ்லாமியர் போகவில்லை என்று  சொல்கிறார்கள் )

    வருடத்தில் 365 நாள்கள் மட்டுமே  வருடத்தில் இங்கு 450 திருவிழா நடைபெறுகிறது தலவிருட்சம் புளியமரம். பெருமாளுக்கு நைவேத்தியம் தயிர் சாதம் மட்டுமே மண் பாத்திரத்தில் .

    சந்திர ஸ்தலம் என்னும் நமது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விஷயம். திருப்பதி குலதெய்வம் என்று சொல்பவர்கள் அதிக உண்டு  ஒரு காலத்திலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை  தமிழராக பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வம் என்பது கிராம தேவதைகளாக தான் இருக்கும்   சிலரின் தவறான கருத்து முறையில் முன்னோரின் தொடர்பின் மை காரணமாக  பெயர் பெற்ற கோவிலை குலதெய்வமாக அங்கீகாரம் செய்து கொண்டார்கள்.

    திருப்பதி செல்லும் முன் குலதெய்வத்தை வழிபட்டு தான் புறப்பட்டு செல்ல வேண்டும்  (திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் இந்த வார்த்தை அறிவுறுத்தலில் இடம் பெற்ற இருக்கும்  )

    முன்பு பல நாட்கள் பயணப்பட்டு திருப்பதி செல்வார்கள்  இப்போது  இப்படி போய்  அப்படி வந்துவிடலாம். அகோபில முதலாம் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ  சடகோப யதீந்திரா மகா தேசிகர்  தான் முதலில் மலைமீது செல்ல படி அமைத்தார்கள்
              
    மலைக்கு செல்லும் இரண்டாம் நடை வழி  ஸ்ரீ வாரி மெட்டு  திருப்பதிக்கு 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரத்தில் மலைக்கு போகலாம் ஆந்திரப் பிரதேச மக்கள் இந்த வழியில் தான் மலைக்கு நடைபயணம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை எப்படி மலையே சிவனாக இருப்பது போல திருப்பதி மலையே பெருமாளாக நினைத்து மலையேறும் முன் மலையை தொட்டு வணங்க வேண்டும் (காலால் மிதித்து நடப்பதற்கு பெருமாளிடம்   உத்தரவுபெற இதன் பிண்ணனியில் எனக்கு ஒரு அனுபவம் உண்டு  2003 ல் திருப்பதி  புராணம் படித்தேன் அதை படித்து விட்டு  சரி மலைக்கு போகும் போது  மிதியடி போடாமல் நடக்க வேண்டும் என்று எண்ணி கொண்டேன் அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து தான் மலைக்கு போனேன் இந்த மிதியடி விஷயம் மறந்து விட்டேன் காரில் இருந்து இறங்கி  ஒரு அடி எடுத்து வைத்தேன் புது மிதியடி  அறுந்தது    அந்த நொடி தான் நினைவுக்கு வந்தது  என் சங்கல்பம்   அதோடு சரி அந்த முறை மூன்று நாட்களாக மலையில் தங்கி இருந்தோம்  மூன்று நாட்களும் வெறும் காலாக தான் நடந்தேன்  அதன் பிறகு இன்று வரை மலைக்கு போகவில்லை)

    திருப்பதி போனால் பலர் நேராக பெருமாள் தரிசனம் தான் செய்கிறார்கள்   இப்படி செய்வது தவறு. சிவன் கோவிலில் முதலில் சிவ தரிசனம் செய்து விட்டு மற்ற பரிவாரங்களை தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் பெருமாள் கோவிலில் முதலில்  அனுமான் தாயார் கருடன்   பிறகு தான் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமலைக்கு செல்லும் முன் முதலில்  அலமேலுமங்காபுரம் என்னும் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து தான் தான் மலைக்கு செல்லவேண்டும். 

  • Perumal slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
     

  • Perumal Slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்

  • Tirupathy Perumal Adisayam

    பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கருவறைக்குள் செல்லும் போது நமது வேண்டுதல்கள் மறந்து போகிறது. கூட்ட நெரிசலால்தான் பெருமாளைச் சரியாகப் பார்க்க முடியவில்லை, நம் பிரார்த்தனையையும் சொல்ல இயலவில்லை என்று நாமே ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு சமாதானமும் அடைந்திருப்போம்.

    ஆனால், உண்மை அதுவல்லவாம். பெருமாளை தரிசனம் செய்யும் கருவறைப் பகுதியில் இருக்கும் ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம் ஞாபகசக்தியை மழுங்கடித்துவிடுகிறதாம். கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கருவறைக்குள்ளே, மணிக்கணக்காக பெருமாளோடு இருக்கிறார்களே, இவர்கள்தான் எவ்வளவு சாவகாசமாக, மனநிறைவாக வேண்டிக்கொள்ளலாம் என்று நாம் சிலசமயம் பொறாமைகூட பட்டிருக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் அப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவதில்லையாம்.

    நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. திருமலை பெருமாள் கருவறைக்கு முன்னால் இருக்கும் கருடாழ்வார் சந்நதியிலிருந்து கர்ப்பகிரகம் வரையிலான இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ‘எனர்ஜி ஃபீல்ட்’ என்று கருதப்படுகிறது. தினமும் பெருமாளை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் மற்றும் கருட, கந்தர்வ, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசர் முதலான இனங்களைச் சேர்ந்த தேவதைகள் எல்லோரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அதனால், அவர்கள் பெருமாளிடம் என்ன கோரவேண்டும் என்று நினைத்து வந்தார்களோ, அவற்றை நினைவுபடுத்திக்கொள்ள இயலாது போய்விடுவார்கள்! அதேபோல கருவறையில் பெருமாளை எந்த அலங்காரத்தில் தரிசித்தோம் என்ற நினைவும் மூளையில் தங்காமல் போய்விடுகிறது! ஆனால், நாம் பெருமாளைப் ‘பார்க்கிறோ’மோ இல்லையோ, தன் கருவறைக்கு முன் நிற்கும் ஒவ்வொருவரையும் பெருமாள் நிச்சயமாகப் பார்க்கிறார்.

    நம் வேண்டுதல்களை அவர் அந்தக் கணத்திலேயே ஈர்த்துக்கொண்டுவிடுகிறார்; உடனேயே அவற்றை நிறைவேற்றியும் வைத்து விடுகிறார். அதனாலேயே அவரிடம் ‘போய்ச் சேர்ந்துவிட்ட’ அந்த வேண்டுதல்களை நாம் மீண்டும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டாதபடி மறந்துவிடுகிறோம் என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.

  • Thirupathy Perumal Adisayam

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • Perumal Dasavadaram

    கடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும்

    எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகை  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்தி பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மை பெருமைக் கொள்ள வைக்கும் .

    மச்ச அவதாரம்:  

    தாயின் வயிற்றிலிருந்து  அவளின் உதிரத்தில் நீந்தி பிறப்பது… 

    இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு  மீன்  என்று அர்த்தம் .கிருத யுகத்தில்  படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து, குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட ,உலகில் பிரளயம் ஏற்பட்டது. சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார் மச்சமூர்த்தி .

    கூர்ம அவதாரம்:

    குழந்தை மூன்றாம் மாதம் கவிழ்ந்து , பின் தலை தூக்கி பார்ப்பது…

     கிருத யுகத்தில் நடைபெற்ற இது , திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். அமிர்தத்தை எடுக்க  மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை  கடைய .அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. தேவர்களுக்கு உதவும் பொருட்டு ,திருமால் ஆமையாக கூர்ம அவதாரம்  எடுத்து மலையைத் தாங்கி கடலையை கடைய துணைபுரிந்தார்.

     வராக அவதாரம்:

    ஆறாம் மாதம்  குழந்தை முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது…

     திருமாலின் மூன்றாவது அவதாரமான இது ,  கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள். இரண்யாட்சன்  என்ற அரக்கன் , பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து வைக்க , பிம்மாதிதேவர்களின்  வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய திருமால் , வெள்ளை நிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள்  நடந்த கடும் போரில் ,வாரகமூர்த்தி இரண்யாட்சனை வென்று  பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.

    நரசிம்ம அவதாரம்:

    எட்டாம் மாதம் உட்கார ஆரம்பிக்கும் குழந்தை தன்  கையில் கிடைத்ததை எல்லாம் கிழிப்பது…

    இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இது கிருத யுகத்தில் நடைபெற்றது. நரன் என்றால் மனிதன்.  சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார். இரண்யகசிபுவிடம் இருந்து தேவர்களை காப்பற்றவும் , தன் பக்தன் பிரகலாதனுக்காகவும் தூணிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

     வாமண அவதாரம்:

    ஒரு வயதில் குழந்தை அடிமேல் அடி வைத்து நடப்பது…

    திரேதா யுகத்தில் நடைபெற்ற இது ,   திருமாலின் ஐந்தாவது அவதாரமாக வைணவர்களால் போற்றப்படுகிறது. பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.

     பரசுராம அவதாரம்:

    வளர்ந்த பின் ஒரு மனிதன் , தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது…

     திரேதா யுகத்தில் நடைபெற்ற  திருமாலின் ஆறாவது அவதாரமான இதில் , சங்கு சக்ரதாரி , கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமாக விளங்கிய பரசுராமர் . ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவரான இவர் ,துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார்.

    ராம அவதாரம்:

    திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது…

    இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படும் இந்த அவதாரத்தில்  ,  அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் இறைவன் கொள்ளப்படுகிறார்.

     பலராம அவதாரம்:

    இல்லறத்தில் நுழைந்தப் பின்  உடன் பிறந்தோர், சுற்றத்தார், மற்றும் உலகோர்க்கு கடமையாற்றுவது…

    இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இந்த அவதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே பலராமனாக அவதரித்தாகக் நம்பிக்கை .

     கிருஷ்ண அவதாரம்:

    முதுமையில் இவ்வுலக பற்றற்று இறைவனை தன்னுள் உணர்ந்து அடுத்த சந்ததிக்கு அதை உபதேசித்து வழிகாட்டுவது…

     துவார யுகத்தில் நடைபெற்ற திருமாலின் ஒன்பதாவது அவதாரம் இது . ஆறில் இருந்து அறுபது வரை   எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம்.

     கல்கி அவதாரம்:

    இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் கண்டு , இறுதியில் முக்தி பெறுவது…

    இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின் இந்த அவதாரம் நிகழும் என்று நம்பப்படுகிறது. இறைவனின் பத்து அவதாரங்களையும்  நம் வாழ்க்கைக்கு  வழிகாட்டும் வேதங்களாக நாம் உணர வேண்டும் . இறை பக்தியோடு நம் வாழ்க்கையை மேம்படுத்துவோம் 

  • Perumal Koil Theertham Magimai

    பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம்  துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

    துளசி  பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது  அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர்.

    துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

    கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.

    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

    பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

     *துளசி_ஆராதனை_துதி!*

    நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
    கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!

    துளசி_ஆராதனை_துதிப்பாடலைப்

    பாடி_வழிபடுவதால்_சர்வ

    மங்களங்களும்_உண்டாகும்.
     

  • Perumal Temple

    பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும்.

    பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?

    மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது.

    அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

    பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

    அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

    கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது.

    இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது.

    இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பு ரம், சந்தனம், சம்பங்கி பு , துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

  • Perumal slogam

    புரட்டாசியில் இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • Kuruvithurai perumal

    தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

    இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த தேரில் வந்து குரு பகவானுக்கு காட்சியளித்து அவர் மகனை மீட்டுத் தந்தார். இதனால் இத்திருத்தலத்தின் எழுந்தருளிய பெருமாள், சித்திர ரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாள் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக வீற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனால் இக்கோவிலில் அவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்ததிருத்தலத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

    மூலவரான சித்திர ரத வல்லப பெருமாள் சுமார்10 அடி உயரத்தில் கம்பீரமாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் குருபகவானின் அருள் தானே வந்தடையும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை மேலும் குழந்தை பாக்கியமும், சகல நன்மைகளையும் கிடைக்கப்பெறும் என்றும் நம்புகின்றனர். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் நாச்சியார்களுடன் உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

    குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதனால், குருதோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு பரிகாரம் மேற்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குருவிற்கு நன்மையளித்த பெருமாளே இங்கு கோவில் கொண்டுள்ளதால், அப்பெருமாளை வணங்கினாலே குரு பகவானின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும் என்பது இத்திருத்தலத்திற்கு நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கை.