திருவாரூர் | எண்கண் அருள்மிகு ஆதிநாராயணபெருமாள் திருக்கல்யாணம்
திருவாரூர் | எண்கண் அருள்மிகு ஆதிநாராயணபெருமாள் திருக்கல்யாணம்
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து தேவஸ்தான ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள் சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றனர்.
மேலும் ஒரு குழுவினர் நரசிம்மர் வேடமணிந்து மாட வீதிகளில் வலம் வந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.
நன்மைகளை பொழியும் பெருமாள் ஸ்லோகம்
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
பொதுப்பொருள் :
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமிருப்பதன் காரணம் பலபேருக்குத் தெரியாது. அதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம். புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார் என்பது ஐதீகம்.
ஆகையால் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.
மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்து வந்தால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில். இத்திருத்தலத்தின் மூலவரான வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தாயாராக குமுதவல்லி அருள்பாலிக்கிறார். நம்மாழ்வார் 12 பாடல்கள் பாடியும், மணவாள மாமுனிகள் மங்களாசனம் செய்ததும் இத்திருத்தலத்திற்கு மேலும் ஒரு சிறப்பு.
பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலககின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார். என்பது இத்தல வரலாறு
இந்தத் தலத்தில் குபேர தீர்த்தம், தாம்பிரவருணி நதி ஆகியவற்றைத் தீர்த்தங்கள் தல தீர்த்தமாக அமைந்துள்ளன. ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள். கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
கடன் தொல்லைகளைத் தீர்த்து, செல்வத்தை பெருக்கும் இத்தல பெருமாளுக்கு தினமும் 5 கால பூஜை நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை, புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் பொதுமக்களால் வார சிறப்பு நாட்களாகக் கொண்டு வணங்கப்படுகின்றன.
ஏப்ரல் 29 ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்
சுபகிருது வருடம் – சித்திரை 16
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்
29-ஏப்-2022 வெள்ளி
சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி ந.இ 1.53
நட்சத்திரம் : ரேவதி இ 7.37
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.
அரங்கநாத சுவாமி கோவில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.
சாரங்கபாணி திருக்கோவில்
சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.
மூலவர் திருக்கோலம்
இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.
கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நாளைப் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும்.
புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
Parimala Ranganathar Perumal Temple or Tiruindaloor is dedicated to Lord Vishnu, located in Thiruvilandur of Mayiladuthurai district. It is one of the Divya Desams, the 108 holy temples of Vishnu revered in Nalayira Divya Prabandham by the Alwars (the 12 poet saints). This temple is in the banks of river Kaveri and is one of the Pancharanga Kshetrams and is called as Andya Rangam (Last Arangam). Srirangam is the first Rangam.

It is believed that River Kaveri is given the holy status of Ganga in this Kshethram. She is being taken by God as bed in Srirangam, as mother in Thirusheri and above his head in this Parimala Ranganathar temple, like River Ganga occupies the head of Lord Shiva. Parimala Ranganathar is believed to have appeared for Chandra, the moon god. This is how the place got the name Thiruindaloor (Indu Means Moon). This place is where moon god Chandra is believed to have been relieved of his curse. Chandra worshiped Vishnu who appeared to please the devotee.
According to another legend, the azhwar saint Thirumangai Azhwar visited the temple and the doors were locked at the time. Lord Parimala Rangan Shut the door on Azhwar reasoning that he was late. Upset at this Azhwar argues vehemently with Lord. Still Parimala Ranganathar refused to open the door. Frustrated and dejected by this, Azhwar decided to leave the place saying “வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம்நீரே”, meaning “I am leaving. You live yourself here and enjoy life”. After this heated argument Lord Parimala Rangan praised and persuaded Thirumangai Azhwar to sing. After hearing the beautiful Tamil of Azhwar, Lord opened the door and gave Darshan. 10 Pasurams were sung by Thirumangai Azhwar on Parimala Rangan.

Thayar of this temple is called Parimala Ranganayaki. The temple follows Pancharatra Agama and thenkalai tradition. The major festival celebrated in the Parimala Ranganathar Temple is the Chithrai festival, celebrated during the Tamil month of Chittirai (April-May). The other festivals in the temple include the 10-day Aaandal Aadi festival celebrated during July-August, Thayar Navaratri Utsavam during the Tamil month of Purattasi (September – October). Like many temples in the Kaveri Delta region, Kadaimuka Snanam or Mudavan Muzhukku is also celebrated in this temple during the tamil month Aippasi, when the river Kaveri joins the sea. Thousands of people will gather on that day to take holy bath in the river.
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.
“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்
ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.
அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.
கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன்,
“சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.