Tag: month

  • Viruchigam December month predictions

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
    விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். லாபாதிபதி புதனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.  நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
    பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். 

    கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மை தரும். 

    அரசியல்துறையினருக்கு நீங்கள் ஏற்பாடு செய்த காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். 
    மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். 

    பரிகாரம்:  மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
     

  • Thulam December month predictions

    (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)
    துலா ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
    பெண்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். சக கலைஞர்களிடையே கருத்து வேற்றுமை  ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். அனைவருடனும் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.
    அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

    பரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனகுழப்பம் தீரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Kannai December month predictions

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
    கன்னி ராசியினரே இந்த மாதம் பணவரவு வரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆவனங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அலுவலகத்தில் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ நிலையினை எடுக்காதீர்கள்.

    குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரலாம்.

    பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
    கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். ஆனாலும் ராசிநாதன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் இருப்பதால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். 

    அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். புதிய பொறுப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். சிறிது டென்ஷனும் ஏற்படலாம்.
    மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.

    பரிகாரம்:  ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Simmam Rasi December month predictions

    (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)
    சிம்ம ராசியினரே இந்த மாதம் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். சுபகாரியங்கள் சம்பந்தமான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

    தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசாங்கம் சார்ந்த தடைகளை தகர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து வலுவான ஆதரவைப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர் காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

    பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
    கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம். சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

    அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  குழப்பங்கள் நீங்கும். உங்களுடைய வளர்ச்சியில் அக்கறை காண்பிப்பீர்கள். பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். 
    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    பரிகாரம்: ஈஸ்வரனுக்கு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Kadagam December month predictions

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசியினரே இந்த மாதம் கிரகநிலை சூழ்நிலையில் ஓரளவுக்கு நன்மை பெற போகிறீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள்  உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
    குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். 

    பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களால்  பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றமான நிலை காணப்படும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

    அரசியல் துறையினருக்கு உங்கள் திறமையான  பேச்சால் வெற்றி பெறுவீர்கள். வாகன  யோகம் உண்டாகும். சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். மேலிடத்தில் உறவு பலப்படும். 
    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். பெற்றோர்கள் – ஆசிரியர்கள் உதவி கிடைக்கும். 

    பரிகாரம்:  துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31
     

  • Midhunam December month predictions

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
    மிதுன ராசியினரே இந்த மாதம் அனைத்து கிரகங்களும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. வீண்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.

    கலைத்துறையினருக்கு யாரிடமும் நிதானமாக பேசி பழகுவது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

    பரிகாரம்: கல்யாண கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Rishabam December month predictions

    (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

    ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, பண நிலுவை வந்து சேர தாமதமாகலாம். 

    குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 
    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.  

     
    கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். 

    அரசியல் துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். மேலிடத்தை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

    பரிகாரம்: விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27,
     

  • Mesham December month predictions

    (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)
    மேஷ ராசியினரே இந்த மாதம் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிக்கிறார். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். குடும்பத்தில் எதிர்பாராத சில காரியங்கள் நடக்கலாம். 

    பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். 

    அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். மேலிடத்தின் மத்தியில் மதிப்பு உயரும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். சக மனிதர்களிடம் மரியாதை அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். 

    பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை அர்ப்பணித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Aipasi month Viseshangal

    ஐப்பசி 1, அக்டோபர் 18, வெள்ளி –  துலா ஸ்நானம் ஆரம்பம்

    ஐப்பசி 2, அக்டோபர் 19, சனி –  கிருஷ்ணபட்ச சஷ்டி

    ஐப்பசி 3,அக்டோபர் 20, ஞாயிறு- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

    ஐப்பசி 4, அக்டோபர் 21, திங்கள் – பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு

    ஐப்பசி  5 ,அக்டோபர் 22, செவ்வாய் –  சோளிங்கபுரம் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் பக்தோதிசிகப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். 

    ஐப்பசி 6 ,அக்டோபர் 23, புதன் –   திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம்.

    ஐப்பசி 7, அக்டோபர் 24, வியாழன் – கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி.

    ஐப்பசி 8, அக்டோபர் 25, வெள்ளி –  கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம். 

    ஐப்பசி 9 , அக்டோபர் 26, சனி – மாஸ சிவராத்ரி,  திதித்வயம், (நட்சத்திர) அமாவாசை.

    ஐப்பசி  10, அக்டோபர் 27, ஞாயிறு – ஸர்வ அமாவாசை. தீபாவளி நோன்பு கேதார கௌரீ விரதம்.

    ஐப்பசி  11, அக்டோபர் 28, திங்கள் – கந்த சஷ்டி ஆரம்பம். 

    ஐப்பசி  12, அக்டோபர் 29, செவ்வாய் – கார்த்திக சுத்தப்ரதமை 

    ஐப்பசி  13, அக்டோபர் 30, புதன் –  பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை.

    ஐப்பசி 14, அக்டோபர் 31, வியாழன் – சுக்லபட்ச சதுர்த்தி. நாகசதுர்த்தி. 

    ஐப்பசி  15, நவம்பர் 01, வெள்ளி –  ஐயடிகள் காடவர்கோன். 

    ஐப்பசி  16, நவம்பர் 02, சனி – சுக்லபட்ச சஷ்டி, திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரஸம்ஹாரம்.

    ஐப்பசி 17, நவம்பர் 03, ஞாயிறு –  திருச்செந்தூர் தெய்வானை திருக்கல்யாணம். 

    ஐப்பசி  18, நவம்பர் 04, திங்கள்- ச்ரவண விரதம். பொய்கையாழ்வார், சிரவண விரதம். 

    ஐப்பசி 19, நவம்பர் 05, செவ்வாய் – பூதத்தாழ்வார், கோஷ்டாஷ்டமி. 

    ஐப்பசி 20, நவம்பர் 06, புதன் – பேயாழ்வார். திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சேவை. 

    ஐப்பசி 21, நவம்பர் 07, வியாழன் – மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம். 

    ஐப்பசி  22, நவம்பர் 08, வெள்ளி – சுக்லபட்ச  சர்வ உத்தான ஏகாதசி. 

    ஐப்பசி  23, நவம்பர் 09, சனி-  சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி. சனிப் பிரதோஷம். 

    ஐப்பசி  24, நவம்பர் 10, ஞாயிறு – திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

    ஐப்பசி  25, நவம்பர் 11, திங்கள் – பௌர்ணமி, அன்னாபிஷேகம். 

    ஐப்பசி  26, நவம்பர் 12, செவ்வாய் – நெடுமாறானார். கார்த்திககௌரி விரதம் 

    ஐப்பசி 27, நவம்பர் 13, புதன் – கார்த்திகை பஹூள பிரதமை, (இடங்கழியார்). கிருத்திகை விரதம். 

    ஐப்பசி 28, நவம்பர்14, வியாழன் – திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

    ஐப்பசி  29, நவம்பர் 15, வெள்ளி –  திருவஹிந்திரபுரம் ஸ்ரீசுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹரசதுர்த்தி. 

    ஐப்பசி 30, நவம்பர் 16, சனி – சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம். 

  • October month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கோபம் அகலும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். 

    ராசிநாதனும் தொழில் ஸ்தானதிபதியுமான குரு ராசியைப் பார்க்கிறார். தனபாக்கியாதிபதி செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

    குடும்பாதிபதி செவ்வாய் சூரியனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

    பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542