Tag: month

  • Vaigasi Month Sirappugal

    முருகன் தலங்கள் மட்டுமின்றி பற்பல வைணவ தலங்களிலும்  சிவாலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கருட சேவை, வைகாசி விசாக உதயத்தில் நடைபெறுகிறது. வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் முக்கியம். அவற்றுள் அதிமுக்கியம் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மேல்கோட்டை (திருநாராயணபுரம்) என்ற நான்கு தலங்கள். அந்த நான்கிலும் மூன்று மிக விசேஷம் என்பார்கள். இதை, ஸ்ரீரங்கம் நடை, திருப்பதி வடை, காஞ்சிபுரம் குடை என்று சொல்வார்கள்.

    அதேகபோல வைகாசி மாதத்தில் தான் மத்வகுல மாமணியான வியாசராஜர் தங்கத்தட்டில் அவதரித்தார்.

    உலகுக்கே அகிம்சையை போதித்த அன்பின் வடிவமான புத்தர்பிரான் அவதரித்தது, ஞானம் பெற்றது, நிர்வாணம் (முக்தி) பெற்றது எல்லாமே இந்நாளில்தான். இதைத்தான் புத்த பூர்ணிமா எனக் கொண்டாடுகிறார்கள்.

     காஞ்சி மகா பெரியவா எனப் போற்றப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திரு அவதாரம் ஜய ஆண்டு வைகாசி அனுஷத்தில்தான் நிகழ்ந்தது.

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையான ராமலிங்க அடிகள் சத்திய தர்ம சாலையை  ஒரு விசாக நாளில்தான் துவக்கினார்.

    வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

  • February month rasipalan

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் உத்தராயணம் ஹேமந்த ரிது தை மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு – சுக்ல பக்ஷ சப்தமியும் – அஸ்வினி நக்ஷத்ரமும் – சுப நாமயோகமும் – கரஜி கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 44.20க்கு (நள்ளிரவு 12.00 மணிக்கு) துலா லக்னத்தில் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.

    பிப்ரவரி மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
    லக்னம் – ஸ்வாதி 4ம் பாதம் – ராகு சாரம்
    சூரியன் – திருவோணம் 3ம் பாதம் – சந்திரன் சாரம்
    சந்திரன் – அஸ்வினி 2ம் பாதம் – கேது சாரம்
    செவ்வாய் – கேட்டை 3ம் பாதம் – புதன் சாரம்
    புதன் – அவிட்டம் 4ம் பாதம் – செவ்வாய் சாரம்
    குரு – பூராடம் 3ம் பாதம் – சுக்கிரன் சாரம்
    சுக்கிரன் – பூரட்டாதி 2ம் பாதம் – குரு சாரம்
    சனி – பூராடம் 4ம் பாதம் – சுக்கிரன் சாரம்
    ராகு – திருவாதிரை 2ம் பாதம் – ராகு சாரம்
    கேது – மூலம் 4ம் பாதம் – கேது சாரம்

    பிப்ரவரி மாத கிரக ராசி – நவாம்சம்:
    சூரியன் – மகரம் – மிதுனம்
    சந்திரன் – மேஷம் – ரிஷபம்
    செவ்வாய் – விருச்சிகம் – கும்பம்
    புதன் – கும்பம் – விருச்சிகம்
    குரு – தனுசு – துலாம்
    சுக்கிரன் – கும்பம் – ரிஷபம்
    சனி – தனுசு – விருச்சிகம்
    ராகு –  மிதுனம் – மகரம்
    கேது – தனுசு – கடகம்

    பிப்ரவரி மாத கிரகமாற்றங்கள்:
    இந்த மாதம் 4ம் தேதி – சுக்கிரன் மீன ராசிக்கு மாறுகிறார்
    இந்த மாதம் 9ம் தேதி – செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுகிறார்
    இந்த மாதம் 13ம் தேதி – சூரியன் கும்ப ராசிக்கு மாறுகிறார்
     

  • Marghazi Month

    மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள்? 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

    மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    தமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவு வருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் தான். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து, திருப்பாவை நோன்பு ஏற்றாள்.
     

  • Karthigai Month Deepam

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    தீபம் ஏற்ற தூய்மைமான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
     

  • Meenam December month predictions

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    மீன ராசியினரே இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
    தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். ராஜாங்க ரீதியாக பயணம் செல்ல வேண்டி வரலாம். 

    குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.    

    பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. 

    கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். 

    அரசியல் துறையினருக்கு இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நிலுவை தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். 

    மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். 

    பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

  • Kumba Rasikku December month predictions

    (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
    கும்ப ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும்  திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள்.
    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  

    பெண்களுக்கு திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். 
    கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலைபளு குறையும். உங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். சக கலைஞர்களை அனுசரித்து செல்வது நல்லது.  

    அரசியல் துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். 

    மாணவர்களுக்கு கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

    பரிகாரம்:  வியாழக்கிழமையில்  ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது  மனோ தைரியத்தை தரும். எதிர்ப்புகள் விலகும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
     

  • Maharam December month predictions

    (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    மகர ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். 

    குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு  அடுத்தவர் கூறும் கருத்துக்களை  அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். 

    அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. மேலிடத்திடம்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும். வாகன வசதி உண்டாகும்.  அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். 

    மாணவர்களுக்கு  எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. 

    பரிகாரம்:  சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
     

  • Dhanusu December month predictions

    (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
    தனுசு ராசியினரே இந்த மாதம் ராசியில் இருக்கும் சனி ஏதாவது  பிரச்சனைகளை  கொடுத்தாலும் ராசிநாதன் குருவால் அவை நல்லபடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும்.

    பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். பங்குதாரர்களிடம் வீண் மனக்கசபு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

    குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும்.
    பெண்களுக்கு எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

    கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

    அரசியல்துறையினருக்கு கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். 
    மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 

    பரிகாரம்: சித்தர்கள் சன்னிதிக்குச் சென்று வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Viruchigam December month predictions

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
    விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். லாபாதிபதி புதனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்/

    குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.  நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
    பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். 

    கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மை தரும். 

    அரசியல்துறையினருக்கு நீங்கள் ஏற்பாடு செய்த காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். 
    மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். 

    பரிகாரம்:  மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Thulam December month predictions

    (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)
    துலா ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
    பெண்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். சக கலைஞர்களிடையே கருத்து வேற்றுமை  ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். அனைவருடனும் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.
    அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

    பரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனகுழப்பம் தீரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542