Tag: month

  • ரிஷபம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் குரு()  – தைரிய வீரிய  ஸ்தானத்தில் செவ்வாய்பஞசம  ஸ்தானத்தில் கேதுகளத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்அஷ்டம  ஸ்தானத்தில் சுக்கிரன்தொழில்  ஸ்தானத்தில் சனிலாப  ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024  அன்று சூர்யன் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ரிஷப ராசியினரேஇந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். சந்திரன் சஞ்சாரத் தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

    கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.    

    பெண்களுக்கு: மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும்.

    மாணவர்களுக்குகல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    ரோகினி:

    இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

    பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

  • Masi month magimaigal

    மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

    மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள்.  இந்தக் காரணங்களால்தான், உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் நடத்துகின்றனர். மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம்.

    முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.

    முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.

    மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும்.  மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

    காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்.

  • Margazhi month viradhangal

    பௌர்ணமி விரதம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

    ஆருத்ரா தரிசனம்
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார்.

    வைகுண்ட ஏகாதசி
    வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    பரசுராம ஜயந்தி
    தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    மாதாந்திர சிவராத்திரி
    சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அனுமன் ஜயந்தி
    இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி அமாவாசை
    முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

    கூடார வல்லி
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 – வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

    போகிப் பண்டிகை
    மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.

  • Aadi month ammanukku ugandha sirappugal

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் களை தரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும். ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத் தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • November 22 2022 Month Sivarathiri

    நவம்பர் 22 – மாத சிவராத்திரி
    சுபகிருது வருடம் – கார்த்திகை 6
    22-நவ-2022 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : திரையோதசி கா 7.30
    நட்சத்திரம் : சுவாதி இ 11.12
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 23 2022 Month Sivarathiri

    அக்டோபர் 23 – மாத சிவராத்திரி
    சுபகிருது வருடம் – ஐப்பசி 6
    கடையம் விஸ்வநாதர், தென்காசி உலகம்மை திருக்கல்யாணம்
    23-அக்-2022 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                         
    திதி    :    திரையோதசி         
    திதி நேரம்    :    திரையோதசி    மா    5.49
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    3.02
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

     

  • vazhipattukku ugandha ipasi month

    வழிபாட்டுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தைப் பொதுவாக துலா மாதம் என்று அழைக்ககிறோம்.

    துலா என்றால் தராசு. இந்த மாததில் தான் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். ஐப்பசி மாதத்தில் பல பண்டிகளைகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்துடன் ஐப்பசி மாதத்தில் தான் அனைத்து நதிகளும் அதன் நீரில், மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் காவிரியில் கரைப்பதாக ஐதிகம்.

    இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப் பாவங்கள் நீங்கும். இந்த மாதத்திற்கு பல்வேறு ஆன்மிக சிறப்புக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

    ஐப்பசி பெளர்ணமி :

    ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி திதி விசேஷமானது. மாதந்தோறும் தான் பெளர்ணமி வருகிறது. ஏன் ஐப்பசி மாத பெளர்ணமி விசேஷமானது. ஐப்பசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    ஐப்பசி சதயம்:

     ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் ஆலயம் இன்று வரையிலும் கட்டிட கலைகளுக்கு எல்லாம் உலக நாடுகளுடன் சவால் விடும் வகையில் கம்பீரமாக ஓங்கி நிற்கிறது. கடல் கடந்தும் தனது கொடியை நாட்டிய வீர தமிழன் ராஜ ராஜ சோழன், ஐப்பசி மாதத்தில் வருகின்ற சதயம் நட்சத்திர நாளில் தான் பிறந்தார். ஐப்பசி மாத சதயம் நாள், ஒவ்வொரு வருடமும் அரசு விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    வளர்பிறை ஏகாதசி:

    ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், வறுமை நீங்கி, பசிப்பிணி அகலும். இப்படி ஐப்பசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினத்தை 'பாபாங்குசா" என்று அழைக்கிறோம்.

    தேய்பிறை ஏகாதசி:

    ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியில் விரதமிருந்து வழிபட்டால், கர்ம சிரத்தையாக வழிபடுபவர்கள் அவர்களது முன்வினைப் பாவங்கள் நீங்கப் பெறுகிறார்கள். இந்த ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.

    கடை முகம்:

    ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதிகம். வருடம் முழுக்க வாங்கிய பாவங்களை, ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில், அனைத்து நதிகளும் காவிரியில் கரைக்கின்றன. அதனால், இந்த தினத்தில் காவிரி நீராடல் புண்ணியம் சேர்க்கும்.

    தீபாவளி :

    நரகாசுரனைக் கொன்ற தினம். ஐப்பசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழர்களின் திருவிழாக்களாக இருந்தாலும், இந்தியா முழுவதுமே தற்போது தீப ஒளித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாட ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகிறார்கள்.

    கந்த சஷ்டி:

    ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாக முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

  • Ippasi month sirappugal

    ஐப்பசி மாதம், 7வது மாதமாகும்.சூரியன்,  துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம், அதனால், இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும், இம்மாதத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், இதற்கு அஸ்வினி மாதம் என பெயர். இதுவே ஐப்பசி மாதமாயிற்று.
     
    பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

    ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது, காவேரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால், அனைத்துவிதமான பாவங்களும் நீங்கும்.

    இம்மாதத்தில்,தேய்பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம்,  மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும்,  உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

    இம்மாதத்தில், தேய்றையில் வரும் திரயோதசி, கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். மேலும், தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால், அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

    ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்தசி. அன்றைய தினம் தீபாவளி பண்டிகை. . இந்த நாளன்று கிருஷ்ணர், நரகாசுரனை கொன்று, மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹா லட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

    தீபாவளிக்கு மறுதினம், கேதார கௌரி விரதம்.  இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

    இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் துவிதியை, எமத் துவிதியை ஆகும். இன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி, சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு, மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    இம்மாதத்தில், வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள், சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நாள். பல கோவில்களில், சூரசம்ஹாரம் நடக்கும். இம்மாதத்தில் வரும் பவுர்ணமியின்று, சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் பங்கேற்றால், வீட்டில், வறுமை ஓழியும்.

  • meena rasi October month 2022 Prediction

    மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:
    ராசியில் குரு(வ) – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து  அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
    தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
    குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
    பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
    கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.
    அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
    மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும்.

    உத்திரட்டாதி:
    இந்த மாதம் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

    ரேவதி:
    இந்த மாதம் அதிகார தோரணையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

    பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27
    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kumbham October month 2022 Prediction

    கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    கிரகநிலை:
    தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – சப்தம ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    படபடப்புடன் காரியங்களை செய்யப்போகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப்போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.
    குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
    பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
    கலைத்துறையினர் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
    அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
    மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

    அவிட்டம் 3, 4 பாதம்:
    இந்த மாதம் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

    சதயம்:
    இந்த மாதம் ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுப்பீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
    இந்த மாதம் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

    பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA