Tag: Kumbabishegam

  • Karpaga vinayakar Alayam kumbabishegam

    பூவிருந்தவல்லி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூவிருந்தவல்லி லகஷ்மிபுரத்தில் கிராம மக்கள் முயற்சியால் புதிதாக ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.இதன் கும்பாபிஷேக விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.மூன்றாம் நாளான இன்று வேதவிற்பனர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டுருந்த யாகத்தில் நான்காம் யாகசாலை பூஜையை செய்து முடித்தனர்.

    பின்னர் பூர்ணாதியோடு கலச நீரை கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள பல்வேறு கிராம  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Gangai amman koil kumbabishegam

    சென்னை திருவொற்றியூரில் பழமையான கங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள பழமையான கங்கை அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது 

     முன்னதாக 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகா லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது இதனையடுத்து  இன்று காலை  யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹுதி  முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்

     இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்

     இதனையடுத்து அம்மனுக்கு விசேஷ வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பழமையான அம்மன் கோவிலில் பல ஆண்டுகள் கழித்து நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார மட்டுமல்லாமல்  இப்பகுதியை சேர்ந்த மக்களும்  ஏராளமானோர் பங்கேற்று  அம்மனை வழிபட்டனர்.  இதனையடுத்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன

  • Pazhanai murugan dec 2 kumbabishegam

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. 

    இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க வருகிற 2 ஆம் தேதி குமபாபிஷேகம்  நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 2-ந்தேதி பாலாலய பூஜை நடைபெற்று, அதன்பின்பு மலைக்கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் திருப்பணிகள் தொடங்கப்படும்.

    இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

  • Gangai Amman Koil Kumbabishegam

    ஆவடி அருகே பருத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ளது ஸ்ரீ கங்கையம்மன் ஆலயம்.பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பருத்திப்பட்டு கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது.இதனை அடுத்து ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் வேத விற்பனர்கள் மத்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
     

  • Vinayakar koil Kumbabishegam

    வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கும்பத்தின் மீது புனித நீர்  ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Moolanadhar Koil Kumbabishegam

    சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில் உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

    சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஏராளமான பொருட்செலவில் ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கட்டப்பட்டது. இதில் ஸ்ரீ உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர், ஸ்ரீ அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.

     இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5 ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. தினமும் பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

    இதற்காக யாகசாலையில் இருந்து மேள  வாத்தியங்கள் முழங்க கடம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. பின்னர் விமானத்தில் புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
     

  • Prathapa simeswarar koil kumbabishegam

    பழமை வாய்ந்த ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று சாமி தரிசனம்.

    காரைக்கால் அருகே உள்ள அகர சேத்தூர்  பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலின் திருப்பணிகள் கடந்த  6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 07ஆம் தேதி அன்று தொடங்கியது 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 8ம் கால யாகபூஜை இன்று காலை 10  மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து மேளதாள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

    யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில்  சுமந்து பிரகாரம் சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து  கோயிலின்  கலசங்களுக்கு  சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற,  கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனையும் ,சுவாமி ,அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இக்கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
     

  • Venkatesa perumal kumbabishegam

    திருத்தணி  அருகேள உள்ள  வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு   வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது கோயிலின் திருப்பணிகள் முடிந்து  கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்காக கோவில் வளாகத்தில் 5 யாகசாலைகள் 1008 கலசங்கள் வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது  காலை 9 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது தொடர்ந்து கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது நண்பகல் 11 மணிக்கு வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது இதில் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர் .

  • Vaikunda Perumal Koil Kumbabishegam

    திருத்தணி அருகே இருக்கும் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    திருத்தணி அருகே நெமிலியில் எழுந்தருளி காட்சி தரும் ஸ்ரீதேவி பூதேவி சமாத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இக் கோயில் பிரதான வாசலில் ராஜகோபுரம்  56 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது,மேலும் கோயில் மூலவர் ராஜ கோபுர விமான சன்னதி, இதர உற்சவர்கள் சன்னதிகள் புனரமைக்கப்பட்டது. 

    இதனை அடுத்து  மூன்று நாட்கள் நடைபெற்ற மஹா கும்பாபுஷேக விழா யொட்டி கோயில் வளாகத்தில் 25 யாகசாலைகள் அமைக்கப்பட்டு பட்டாச்சரியார்கள் குழுவினர் ஹோம குண்ட பூஜைகள் தொடர்ந்து காலை 9 மணி அளவில்  மஹா பூர்ணாஹுதி செய்யப்பட்டு  மேள தாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் மத்தியில்  புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கோயில்  ஐந்து நிலை ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரம் உட்பட உற்சவர் சன்னதி கோபுரங்களுக்கு  புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது கோயில் அருகில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் பெருமாளை வணங்கினர். மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவை யொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
     

  • Selva vinayagar koil Kumbabishegam

    அரக்கோணம் அருகே அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர்..

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பகுதியில் நீண்டகாலமாக சிறிய கோயிலாக இருந்து வந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தற்போது மூன்று தள விமானத்துடனும் பல சிற்ப வேலைபாடுகளுடன் பெரிய கற்கோயிலாக கட்டப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     விழா கடந்த 10 தேதி பந்தகால் நடுதல், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் என துவங்கி நாள் தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்து. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

    இதில் வேத மத்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது….