Tag: Koil

  • vanjinathar koil kadai theerthavari

    ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில்  கடைதீர்த்தவாரியை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்டோர் நீராடி சாமி தரிசனம்

    உலகத்தில் எம பயம் இல்லாதவர்கள் யாரும் இல்லை அந்த எம பயத்தையும் பைரவ உபாதையும் போக்கும் வகையில் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ எமதர்மராஜா சித்திரகுப்தர் தனி சன்னதியில் இருந்து அருள் பாலிக்கும் திருக்கோவிலும் மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் செய்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என பெயர் பெற்றது. இவ்வாறு உலகம் போற்றும் சிறப்பு தளமாக விளங்குகிறது.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம்  வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர்  மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து . 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அதிகாலை முதல் குளத்தில் நீராடி அதன் பின்னர் சுவாமியை  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர் இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Nellaiappar koil panguni uthiram kodiyetram

    நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றதுடன் வெகு விமர்சியாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா   கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து பங்குனிஉத்திர திருவிழாவிற்கான  கொடிப்பட்டம் பல்லக்கில் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.பின்னர் திருகொடிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் மேல வாத்தியங்கள் இசைக்க சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்  கொடியேற்றப்பட்டது .தொடர்ச்சியாக கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் சுவாடேச மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

    கொடியேற்ற விழாவில் திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்  4ஆம் திருநாளன்று சுவாமி நெல்லையப்பர் சுயம்புவாக உருவான வரலாறுத் திருவிளையாடல் நிகழ்வும்  10 ம் திருநாள் அன்று  ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும்  திருவிழாவும்  நடைபெற உள்ளது.
     

  • november 22 sivan koil sangabishegam

    நவம்பர் 22 – சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    பிலவ வருடம் – கார்த்திகை 6
    திருவண்ணாமலை முருகன் தெப்பம், 
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    22-நவ-2021 திங்கள்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    8.55
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    கா    10.15
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Mayam perumal koil kumbabishegam

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிம்மக்காள் பட்டி அருள்மிகு மாயம் பெருமாள்சாமி கோவில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. 

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் எரதிம்மக்காள் பட்டியில் அமைந்துள்ள பாதகட்டி பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடை பெற்றது. விழாவை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி,கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி நடைபெற்றது. 

    இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் மேல்  புனித நீர் தெளிக்கப்பட்டது . 

    பின்னர் மூலவர்பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனமும் , சிறப்பு அபிசேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை  பாத கட்டி பங்காளிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். இவ்விழாவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Perumal Koil Theertham Magimai

    பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம்  துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

    துளசி  பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது  அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர்.

    துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

    கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.

    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

    பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

     *துளசி_ஆராதனை_துதி!*

    நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
    கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!

    துளசி_ஆராதனை_துதிப்பாடலைப்

    பாடி_வழிபடுவதால்_சர்வ

    மங்களங்களும்_உண்டாகும்.
     

  • Ayothya Ezhumalayan Koil

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் முக்கிய நகரங்களில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய நிலையில் அயோத்தியில் ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக  கோயில் கட்டுமானத்திற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்திரப்பிரதேச மாநில அரசை  உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்க முடிவு செய்துள்ளனர். 2021 ஆண்டுக்கான புத்தாண்டு காலண்டர்,  டைரிகள் விலையை உயர்த்த தேவஸ்தான சப் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பொது கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் விலை உயர்வை ஏற்க  அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுத்துள்ளார். 

    இதனால் பழைய விலைக்கே காலண்டர், டைரிகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். திருமலையில் உள்ள ஏசி அறைகளின் வாடகையை ரூ 1000 விலைக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில்  ரூ .1,500 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

  • Koothanoor Saraswathi koil

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

    ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

    சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

    இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

    அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

    சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

    குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

    ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

    சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை

  • Rinavimorchanar koil

    தமிழகத்து ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த வகையில், கடன் தொல்லை தீர்க்கும் தலமாகத் திகழ்வது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சேறை செந்நெறியப்பர் சிவாலயமாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தென்கரைத்தலங்களுள் ஒன்றாக, இச் சிவாலாயம் விளங்குகிறது.

    மனிதனுக்குச் செம்மை தரும் நெறியை முத்திநெறியை அளிக்கும் தலமாக விளங்குவதால், இறைவனுக்குச் செந்நெறியப்பர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் முற்பிறவிக் கடன் தீர்க்கும் தேவாரத்தலமாகவும் விளங்குகிறது.கடன் பிரச்சனையை போக்கும் ரிணவிமோசனர் வாழும் தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.இக்கோவிலில் மூலவராக ரிணவிமோசனர் அருள்பாலிக்கிறார். 

    மேலும் எந்தச் சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்குள்ள பைரவர் தனது இடது மேல்கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி தருகின்றார். மேலும் சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்னும் மூவகை தேவியர்கள் இத்திருத்லத்தில் வீற்றிருக்கிறார்கள். மேலும் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தர்சஷ்டி, பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் இங்குள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். எண்ணற்ற சிறப்பம்சமுள்ளது இத்திருத்தலம்.

  • Sabarimalai Iyappan Koil Thirappu

    சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9 ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. 

    கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

    இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    கோயில்களின் அளவைப்பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. அதாவது 100 சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Gangai amman koil kumbabishegam

    சென்னை திருவொற்றியூரில் பழமையான கங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள பழமையான கங்கை அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது 

     முன்னதாக 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகா லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது இதனையடுத்து  இன்று காலை  யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹுதி  முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்

     இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்

     இதனையடுத்து அம்மனுக்கு விசேஷ வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பழமையான அம்மன் கோவிலில் பல ஆண்டுகள் கழித்து நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார மட்டுமல்லாமல்  இப்பகுதியை சேர்ந்த மக்களும்  ஏராளமானோர் பங்கேற்று  அம்மனை வழிபட்டனர்.  இதனையடுத்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன