Tag: Garuda

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • Thirupathy Garuda vaganam

    கார்த்திகை பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த நிலையில் அங்கு அவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

     தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • Garuda vagananthil kanchi varadharaja perumal

    உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கேவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை யொட்டி தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜப்பெருமாள்

    உலகப் புகழ்பெற்றதும் அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 31-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக  நடைபெற்று வருகிறது.கருட சேவை உற்சவத்தையொட்டி  அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு,தாயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆனது நடைபெற்று மலையிலிருந்து சாமி எழுந்தருளச்செய்யப்பட்டது.

    அதன் பின் தங்க கருட வாகனத்தில் பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு,பட்டு உடுத்தி,திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு தங்க கருட வாகனத்தில் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகளில் பொது மக்கள் பகதர்கள் வெள்ளத்திற்கு மத்தியிலே வீதி உலா வந்து வரதராஜப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இந்த கருடசேவை உற்சவத்தினை காண  உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜப்பெருமாளுக்கு கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கருட சேவை உற்சவத்தைக்காண வருகை தந்த பொதுமக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர்,மோர்,அன்னதானங்களும் பலதரப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.

    கருட சேவை உற்ச்சவத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில்  பல நூற்றுக்கணக்கான போலீசார் காஞ்சிபுரம் மாநகர் முழுவதிலும்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும், எவ்வித குற்ற செயல்களும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே சிசிடிவி  காண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும்,மக்கள் கூட்டம் கூடும் அதிக கூட்ட நெரிடல் பகுதிகளில் உயர் கூண்டுகள் அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • Garuda mandiram

    ஸ்ரீ கருட பகவான் மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். 

    ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர். இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.

    இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்கள் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. 

    கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும். தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.

    நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.

    அந்த கருட மந்திரம்…
    சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க 
    ஸ்ரீ கருட காயத்ரி 

    ஓம் தத்புருஷாய வித்மஹே|
    ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
    தன்னோ கருட ப்ரசோதயாத் ||                                          

  • Garuda jayanthi

    தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

    யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்? 

    ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள். 

    புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் ஸர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நக்ஷத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

    ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள். 

    ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள். 

    சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள். 6. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள். 

    பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள். 

    கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள். 

    ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள். 

    கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர். 

    கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்
    ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும் நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். 
    திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும். 
    செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும். 
    புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும். 
    வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும் 
    சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம். 

    கருடாழ்வாரை தரிசிக்கும்போது குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

  • Garuda Mandiram

    கருட சேவை:
    பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம்.  இதனை  "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.

    கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும்.  கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

    கருட வியூகம்:
    கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

    கருட மந்திரம் :
    "குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
    விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
    என்னும்  கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.  

    கருடாழ்வானின் பகவத் தொண்டு:
    ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான  மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான்.  அதுவே கருடாத்ரி என்பதாகும்.

    எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.  

    கருடனும் அஹோபிலமும்:  
    கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

    கருட புராணம்:
    ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்
     

  • Garuda vazhipadu

    அணைத்து ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

    மேஷம் – புதன், சனி
    ரிஷபம் – செவ்வாய், வியாழன்
    மிதுனம் – திங்கள், செவ்வாய், வியாழன்
    கடகம் – புதன், வெள்ளி
    சிம்மம் – திங்கள், வெள்ளி
    கன்னி – திங்கள், செவ்வாய், வியாழன்
    துலாம் – வியாழன், வெள்ளி
    தனுசு – திங்கள், செவ்வாய்
    மகரம்  – திங்கள், வியாழன்
    கும்பம்  – புதன், வியாழன்
    மீனம் – வெள்ளி, சனி
     

  • Garuda vganathi thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் பெரிய ஜீயர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
     

  • Garuda bagavan dharisana palangal

    ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்

    நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

    திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.

    செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.

    புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

    வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்

    சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.

    கருடாழ்வாரை தரிசிக்கும்போது கூறி வணங்க வேண்டிய மந்திரம்

    குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! 
    விஷ்ணு வாஹ ! 
    நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:

    என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
     

  • July 28 Garuda Panjami

    ஜூலை 28 – கருட ஜெயந்தி
    சார்வரி வருடம் – ஆடி 13
    கருட ஜெயந்தி
    28-ஜூலை-2020 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    7.22
    நட்சத்திரம்    :    சுவாதி    ப    12.28
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்