Tag: Garuda

  • Garuda Panjami Viradham

    ஆண்டு தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும்.கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். கருடன், மகா பலம் உடையவர். 

    அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மேலும் கருட பகவான் விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானை விரதமிருந்து வணங்கினால் பாவங்கள், நோய்கள் அகலும், குடும்ப நலம், தைரியம் ஏற்படும், எதிரிகள் தொல்லை அகலும், நீண்ட ஆயுள், பணவரவு, ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுபிட்சம் பெருகும்
     

  • Garuda vaganathil thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்….

    Posted by shakthionline.com on Monday, July 6, 2020

    முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் துணை செயல்அலுவலர் ஹரிந்திரநாத்,  சிறப்பு அதிகாரி சேஷாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Garuda Dharisanam Palangal

    ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவர் கருடன். கருடாழ்வாருக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.

    ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.

    கருட தரிசனப்பலன்:

    கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத் தரும். பலன்களும் கிடைக்கும். அவை,

    ஞாயிறு – நோய் நீங்கும்.

    திங்கள், செவ்வாய் – அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.

    புதன், வியாழன் – பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.

    வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.

    அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டும். 

    கருட மந்திரம் :
    "குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
    விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
    என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.
     

  • Thanga Garuda vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மலையப்ப சுவாமி. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் பொழுது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

    வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உடன் நிறைவு பெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையாக  ஐந்தாவது நாள் நான்காம் தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

    இதனை காண்பதற்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மோற்சவத்தின் கருட சேவையாக இன்று நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை நடத்தப்பட்டது. இதையொட்டி நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறக்கூடிய கருட சேவையில் எவ்வாறு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்களோ அதுபோன்று இன்று நடைபெற்ற கருட சேவையின் போது பக்தர்கள் நான்கு மாடவீதியில் அனுமதிக்கப்பட்டனர். 

    போலீசார் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் எந்தெந்த இடங்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து அதிகாரிகள் மாதிரி கருட சேவையாக இன்று நடத்தினர். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  எஸ்பி அன்புராஜன், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, கூடுதல் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சிவகுமார் ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.