இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – துணிவு
மிதுனம் – முயற்சி
கடகம் – பயணம்
சிம்மம் – வெற்றி
கன்னி – லாபம்
துலாம் – கவனம்
விருச்சிகம் – கீர்த்தி
தனுசு – பயம்
மகரம் – பொறுமை
கும்பம் – ஆக்கம்
மீனம் – நிம்மதி
சந்திராஷ்டமம் – திருவாதிரை
Tag: பகவான்
-
November 08 2024 Rasipalan
-
November 08 2024 Subamuhurthanaal
நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
குரோதி வருடம் – ஐப்பசி 22
நவம்பர் 08 – 2024
வெள்ளி
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 8.22
நட்சத்திரம் : உத்திராடம் கா 9.37
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Palani soorasamharam
பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார்.
தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில்குமார் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
-
Pazhamuthir solai soorasamharam
முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹாரம்: கொட்டும் மழையில் வெள்ளி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வை திரளான பக்தர்கள் "அரோகரா, வெற்றிவேல் வீரவேல்" என்ற கோஷத்துடன் கண்டும் சுவாமியை மலர்தூவி வரவேற்று தரிசனம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு..:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீடாக போற்றப்படக் கூடிய பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாக்கூடிய கந்தசஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சமேதராக வீற்றிருக்கும் சோலைமலை உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் தொடர்ந்து அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து, சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக
சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று, ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர். இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, மாலை வெள்ளி மயில் வானத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோயிலின் அருகேயுள்ள நாவல் மரத்தடி ஈசான திக்கில் "வெள்ளி வேல் கொண்டு" கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், சம்ஹாரம் செய்து, தொடர்ந்து பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல் கோஷமும்" விண்னை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, நாளை ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. நடைபெறுகிறது.
-
Siruvapuri soorasamharam
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது.
முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார்.
தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.
-
Thiruvarur Soorasamharam vizha
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய உபகோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா: உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களில் ஒன்றான ஆலயத்தின் வடக்குபகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்வாலயத்தில் கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹார விழா உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் திருவாரூர் வடக்குராஜ வீதியில் விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் சூரபத்மன் பல்வேறு உருவங்களில் அதாவது கஜமுகாசுரனாகவும், சிங்கமுகாசுரனாகவும், சூரபத்மனாகவும் ஸ்ரீமுருகப்பெருமானை எதிர்கொண்டு போரிட்டபோது ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகப்பெருமான் தன்னிடம் உள்ள வெற்றிவேலைக்கொண்டு சூரபத்மன் தலையை கொய்து வதம் செய்தார்.
பிரசித்திபெற்ற இச்சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி பரவச கோஷத்துடன் முருகப்பெருமானை மனமுருக வழிபட்டனர். இதனை தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் மண்டியிட்டு பிரகாரத்தினை வலம்வந்து 6 நாள் சஷ்டி விரதத்தை நிறைவுசெய்தனர். இவ்விழாவில் கார்த்திகை வழிபாட்டுச்ங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சௌரிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
-
Thiruthani Kanthasasti puspanjali
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.
இன்று ஆறாம் நாள் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு பத்து டன் வண்ண மலர்களால் சிறப்பு பூஜை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை சண்முகப் பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் மூன்று மணி நேரம் பூஜையில் கலந்து கொண்டு சாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலியை அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
-
November 07 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – துணிவு
ரிஷபம் – செலவு
மிதுனம் – இன்பம்
கடகம் – லாபம்
சிம்மம் – யோகம்
கன்னி – துன்பம்
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – பொறுமை
தனுசு – பயணம்
மகரம் – சாந்தம்
கும்பம் – வெற்றி
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம் -
November 07 soorasamharam
நவம்பர் 07 – சூரசம்ஹாரம்…
குரோதி வருடம் – ஐப்பசி 21
நவம்பர் 07 – 2024
வியாழன்
சூரசம்ஹாரம்,
கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்
கந்தசஷ்டி விரதம் முடிவு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 9.32
நட்சத்திரம் : பூராடம் கா 9.55
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Kariyapatti kanda sasti vizha
காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாள் யாகசாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாளான இன்று வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி,தெய்வனை, சுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், மஞ்சள், அரிசிமாவு, தேன், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்துடன் முருகனுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்பு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.