Tag: பகவான்

  • Iraivanai poojitha Sooriyan

    மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்- பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு  முக்தீஸ்வரர் ஆலயத்தில் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மூன்று துவாரங்கள் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் ஊடுருவி முத்தீஸ்வர பெருமானை தழுவி செல்லும் இந்த அரிய நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் நடைபெறும்.

    முதலாவதாக மார்ச் மாதத்தில் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினமும் காலை 6:35 மணி முதல் 6:45 மணி வரை ஒரு முறையும் பிறகு 7:00 மணி முதல் 7 :10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 23ஆம் தேதி வரை சூரிய ஒளிபூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலை 6 :15 மணி முதல் 6:25 மணி வரை ஒரு முறையும். பிறகு 6:40 முதல் 6:50 மணி வரை என இரண்டாவது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

    இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம் ) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும் , மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது .

    அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும் , செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது . சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இந்த நாட்கள் விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு , அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும், சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால் , இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Namakkal Anjaneyar Abishegam

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.  இங்கு சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஆஞ்சநேயருக்கு  வெள்ளிக் கவசத்தை சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.  சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

     

  • September 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை
    ரிஷபம்         – தனம்
    மிதுனம்     – சினம்
    கடகம்         –  உற்சாகம்
    சிம்மம்         –   பாராட்டு
    கன்னி         –    நன்மை
    துலாம்         –     இரக்கம்
    விருச்சிகம்     –  ஊக்கம்  
    தனுசு         –    மகிழ்ச்சி
    மகரம்         –   உழைப்பு
    கும்பம்         –     உற்சாகம்
    மீனம்         –    அமைதி
    சந்திராஷ்டமம்    –        உத்திரம்

     

  • September 21 2024 Mahabarani

    செப்டம்பர் 21 – மஹாபரணி…
    குரோதி வருடம் – புரட்டாசி 5
    செப்டம்பர் 21 – 2024
    சனி
    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    சங்கடஹர சதுர்த்தி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை அ.கா 1.58
    நட்சத்திரம் :  அசுவினி கா 8.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Purataci saturday viradham

    புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்ததும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.

    வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.

  • September 20 2024 Indrayanaal

    செப்டம்பர் 20 – இன்றைய நாள் எப்படி…?
    குரோதி வருடம் – புரட்டாசி 4
    செப்டம்பர் 20 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை அ.கா 3.39
    நட்சத்திரம் :  ரேவதி கா 9.38
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • September 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  போட்டி
    ரிஷபம்         – கவனம்
    மிதுனம்     – மகிழ்ச்சி
    கடகம்         –  நட்பு
    சிம்மம்         –   சோர்வு
    கன்னி         –    விருத்தி  
    துலாம்         –     களிப்பு
    விருச்சிகம்     –  தொல்லை
    தனுசு         –    முயற்சி
    மகரம்         –   பயம்
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –    விவேகம்
    சந்திராஷ்டமம்    –        பூரம்

     

  • September 19 2024 Indrayanaal

    செப்டம்பர் 19 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 3
    செப்டம்பர் 19 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 6.41
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி கா 11.15
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   மகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • September 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பகை
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – நன்மை
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   மேன்மை  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     நோய்
    விருச்சிகம்     –  உயர்வு
    தனுசு         –    களிப்பு  
    மகரம்         –   பாசம்  
    கும்பம்         –     அன்பு
    மீனம்         –    அமைதி
    சந்திராஷ்டமம்    –        ஆயில்யம், மகம்

  • Thirupathy garuda sevai

    பௌர்ணமி தினத்திலி திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

     அந்த வகையில் பௌர்ணமி நாளான இன்று ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

     தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நெய்வேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோசங்களுக்கு இடையே கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பட்டை கண்டு வழிபட்டனர்.