Tag: 63

  • 63 Nayanmaragal veedhi ula

    சேலத்தில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெறும் அதன் அடிப்படையில் இந்த வருடம்  20வதுஆண்டு 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது முன்னதாக  சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து  63 நாயன்மார்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகமும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ருத்ர பாராயணம் நடைபெற்றது பின்னர் சிறப்புயாகம் நடைபெற்றதை தொடர்ந்து வலம்புரி விநாயகர் சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மாலையில் உற்சவமூர்த்தியான சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தாயாருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தி வாகன பல்லக்கில்  சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து திருமூலர் புத்தகத்திற்கு பூஜை செய்யப்பட்ட பின்னர் சேக்கிழார் சிறு தொண்டர் நாயனார், திருமூலர், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், ஸ்ரீ சடைய நாயனார், ஸ்ரீ நீலகண்ட யாழ்பாணர், பூசலார் நாயனார், உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி பல்லக்கில் 63 நாயன்மார்களை அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க சிவாச்சாரியார் அர்ச்சனை செய்த பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் திருவீதி உலா சுகவனேஸ்வரர் கோவிலில் தொடங்கி முதல் அக்ரஹாரம் பட்டை கோவில் சின்ன கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் சுகவனேஸ்வரர் ஆலயத்தை அடைந்தது இந்த திருவீதி உலாவை காண அப்பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர் திருவீதி உலா வைபவத்தின் ஏற்பாட்டினை திருவெம்பாவை பெருவிழா கழகம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

  • kanchi 63 nayanmargal

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின்  ஆறாம் நாளில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நான்கு ராஜ வீதிகள் வலம் வர ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் ஆறாம் நாள் காலை, பிரசித்தி பெற்ற உற்சங்களில் ஒன்றான 63 நாயன்மார்கள் உற்சவத்தையொட்டி  ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலி அம்பாளும் எழுந்தருளி, 63நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து படைச்சூழ  வர மேளத்தாளங்கள் இசைக்க,சிவ வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

    வழிநெடுகிலும்  உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து  ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63நாயன்மார்களுடன் படைச் சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி விரும்பி  சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    மேலும் இந்த 63நாயன்மார்கள் உற்ச்சவத்தையொட்டி கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரமே  விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • 63 nayanmargal thiruveedhi ula

    திருநெல்வேலி  மாநகாில் பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்பு 

    திருநெல்வேலி மாநாில் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில்.  பழமையும்,பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களின் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். இதற்கான கொடியேற்றம்  கடந்த 8 ம் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. 6-ம் திருவிழாவான இன்று  காலை சுவாமி, அம்பாள் மற்றும்  63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

    தொடர்ந்து  மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் திருமுறைபாடி, பெண்கள் கோலாட்டம் ஆடியபடி 8 ரதவீதிகளில்  வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த படியாக 63 நாயன்மார்கள் வீதியுலா நெல்லையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

  • 63 Nayanmargal varalaru

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    திருநீலகண்ட நாயனார் புராணம்    (பாகம்-1)

    சிதம்பரத்தில் 
    ஒரு சிவபக்தன்.

    பிறப்பாலும்
    தொழிலாலும்
    அவன் ஒரு குயவன்.

    மண்பானை செய்து விற்பது அவனது 
    ஜீவனத் தொழில்.

    அவனுக்குப் பிடித்த 
    சிவ தொழில் 
    ஒன்று உண்டு.

    சிவனடியார்களைக் கண்டால் விடமாட்டான். அடி தொழுவான்.
    அவரைத் தன் 
    குடிசைக்கு அழைத்து வந்து உபசரிப்பான்.

    பரமசிவனே விஜயம் புரிந்தது போல்
    பரவசம் அடைவான்.
    புளகாங்கிதம் கொள்வான். 

    அவன் மணந்த 
    மங்கை நல்லாளோ
    அவனினும் மிக்க அன்பரசி.
    சிவனடி தொழும் மாதரசி.
    அடியார் போற்றும் கற்பரசி.

    காலை எழுந்தவுடன் முதலில் ஒரு திருவோடு செய்வது அவர் வழக்கம். 

    இல்லம் வரும் சிவனடியாருக்கு 
    உள்ளம் போற்றும் அத்திருவோட்டை வழங்கி வழியனுப்புதல் 
    அவர்தம் இறைகொள்கை.

    இறையருளால் 
    இளமை ததும்பி 
    நின்ற இருவரும் 
    இல்வாழ்க்கையிலும் குறை வைக்கவில்லை.

    அக்கம்பக்கத்தார் பொறாமை கொள்ளும் அளவுக்கு 
    அத்தனை அன்யோன்யம்.

    சிவன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் அவன் பரமனை 
    சிவன் என்றோ 
    உலவும் ஆயிரமாயிரம் திருநாமங்களிலோ தொழுவதில்லை.

    ஒரு காலத்தில் 
    உலகை உய்விக்க சிவபெருமான் 
    ஆலகால விஷத்தை உண்ட போது
    அருகிருந்த 
    சிவகாமித் தாயார் 
    அவரது கழுத்து கண்டத்தை 
    இறுகப்பற்றி
    கீழே விஷம் இறங்காமல் காத்த சம்பவம் 
    அடிக்கடி அவன் கற்பனையில் 
    காட்சியாய் வந்து நிற்கும்.

    எனவே அவன் எம்பெருமானை 'திருநீலகண்டம்' என்றே எந்நேரமும் அழைப்பான்.
    சர்வகாலமும் தொழுவான்.

    எதற்கெடுத்தாலும் 'திருநீலகண்டம்'
    எனும் எட்டெழுத்து மந்திரத்தை
    அவன் திருவாய் மலர 
    அது ஆங்கிருப்போர் 
    அத்தனை பேரின் செவிகளையும் 
    தேனாய் நிரப்பும்.

    எனவே 
    'அவரை'
    சிதம்பரத்து மக்கள் 'திருநீலகண்டர்'
    என்றே வாய் மணக்க சொல் இனிக்க
    அழைக்கலாயினர்.

    பேராண்மையும் 
    பேரன்பும் 
    பேரின்ப பெருவாழ்வும் நிறைந்திருந்த திருநீலகண்டரின் 
    திரு வாழ்வில் 
    ஒரு திருவிளையாடல் புரிய நினைத்தார் 
    தில்லையம்பதியார்.

    அக்கணமே 
    திரிசடையனின் திருவிளையாட்டு அரங்கேறத் தொடங்கியது.

    அப்போது திருநீலகண்டர் இறை பணி முடித்து
    வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அது சமயம் திடீரென லேசான மழை.

    மழைக்கு ஒரு வீட்டின் திண்ணையில் ஒதுங்கினார் நீலகண்டர்.

    அந்த வீடு 
    ஒரு வேசியின் வீடு.

    யதார்த்தமாக 
    அவ்வேளை அவள் தாம்பூலச்சாறை
    சன்னல் வழியே 
    வெளியே துப்ப…

    அச் செஞ்சாறு
    நீலகண்டரைக்
    கறை ஆக்கியது.

    இதைக் கண்டு 
    துடித்துப் போன பரத்தை நீலகண்டரை
    வீட்டினுள் அழைத்து
    சொம்பு நீர் தந்து
    தாம்பூலக் கறையைக்
    கழுவச் செய்தாள்.

    அப்போதுதான் 
    நீலகண்டர் 
    அவள் முகம் பார்த்தார்.

    அவளைப் பரத்தை
    என்று சொன்னால் சொன்னவர் 
    நாக்கு அழுகும்.
    அப்படி 
    ஒரு குடும்ப விளக்காய் காட்சியளித்தாள்.

    வந்ததை வரவில் வைக்கும் 
    உடல் விற்பவள் 
    அல்ல அவள்.
    மனம் ஒப்பும் 
    மணவாளனுடன் மட்டும் கூடிக் களிக்கும்
    சரசக்காரி.
    காதல் களியாட்ட
    சிருங்காரச் சிங்காரி.

    இருவர் கண்களும் ஈர்த்திழுக்க
    பிடித்தது காட்டுத் 'தீ'
    கொழுந்துவிட்டு 
    எரிந்தது காமத் 'தீ'.

    அவள் விழிகள் 
    விருந்து போட
    நீலகண்டர்
    தன்னைத் தொலைத்தார்.
    நாளும் தொழும் 
    தலைவன் 
    சிவனை மறந்தார்.
    ஊரே மெச்சும் இல்லத் தலைவியையும் மறந்தார்.

    எப்படியோ ஒருவழியாக காமத் தேர் 
    நிலைக்கு வந்தது.
    நிலைமை புரிந்த நீலகண்டர் 
    வெட்கித் 
    தலைகுனிந்த படி 
    வீட்டிற்குத் திரும்பினார்.

    அப்போது பலத்த மழை.
    அம் மழைத்துளிகள் நீலகண்டரின் கறையை நீக்க முடியாமல்
    வேதனையோடு 
    தரைமண் சேர்ந்தன.

    காமம் பொல்லாதது.
    பிரம்மாவையும் இந்திரனையும் சந்திரனையும் 
    காசிபரையும் விசுவாமித்திரரையும்   பெண்களையே 
    பார்க்க வேண்டாம் 
    என்று காடேகிய மகான்களையும் விட்டுவைக்காதது.

    காமம் விஷம் 
    என்று
    மூச்சுக்கு 
    முன்னூறு தரம் போதித்தவர்  கூட 
    ஆரணங்கின் 
    ஸ்பரிசம் பட்டதும்
    அமிர்தம் என்று 
    தாகம் தீர்த்த
    புராணக் கதைகள் 
    ஆயிரம் உண்டே.

    நீலகண்டர் 
    எம்மாத்திரம்?

    வீட்டின் வாசலில் அலங்கரிக்கப்பட்ட அம்மனைப் போல் அபிஷேகிக்கத்தக்க 
    லட்சுமி போல் கணவனுக்காகக் காத்திருந்தாள் 
    கற்புடை நல்லாள்.

    நீலகண்டரின் 
    அன்றைய செயல்தான் விஷம் போல் 
    நீலம் 
    பூத்து இருந்ததே!

    மாற்றம் 
    இல்லாளுக்குப் புரிந்தது.
    காமுகக் கணவனின் தகிடுதத்தம் 
    கண்களை நனைத்தது.

    கோபம் கொப்பளித்தது.
    காத்திருந்த தாபம் காற்றோடு கரைந்து அணைந்து
    கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

    அதை ஊடல் என நினைத்த நீலகண்டர்
    சரச மாடி 
    சமாளித்து விடலாம்
    என மனையாளை நெருங்கினார்.

    அம்மையாரின் எதிர்ப்பு ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
    கடும் புயலின் அமைதி.
    குரல் மட்டும் கணீர்.

    "தொடாதீங்க… இன்னொரு மாதைத் தொட்டக் கரங்கள் 
    இனி 'எம்மைத்'
    தொட வேண்டாம்…
    திருநீலகண்டம் மீது ஆணை…!"

    நீலகண்டர்  அதிர்ந்தார்.

    பரத்தை வீடு சென்று சரசமாடிய கதை 
    அதற்குள் வீட்டுக்குத் தெரிந்து விட்டதே!

    அப்போது அவருள் 
    ஒரு வார்த்தை உறுத்தியது.

    மனையாள் 
    மந்திரம் போல் உத்தரவிட்ட 
    'எம்மைத் தொடாதே'
    அவர் உள்ளத்தை உலுக்கியது.

    'எம்மை'
    என்பதிலிருந்த 'பன்மை' எப்பெண்ணையும் தொடாதே 
    என்று தொனித்தது.

    உள்ளிருக்கும் நாதன் 
    'ஆம்' என்று 
    ஆமோதிப்பது 
    போலிருந்தது.

    அக்கணமே விலகினார்.
    'எப்பெண்ணையும் 
    இனி பாரேன்…
    உடல் சுகம் தேடேன்…'
    நீலகண்டர் முடிவெடுத்தார்.

    முடியுடை சிவனும் உள்ளிருந்தே 
    உளம் சிரித்தான்.

    (திருநீலகண்டர் புராணம்- – தொடரும்)

  • 63

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிவன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளான இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாள் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து நேற்றய தினம் பங்குனி விழாவின் 7ம் நாளையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது விநாயகர், கபாலீஸ்வரர், அம்மன், முருகன், சன்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வந்தன திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இன்று பங்குனி விழாவின் 8 ம் நாள் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் முக்கிய நான்கு மாட வீதிகளான கீழவீதி , தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியே நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிக்கனக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். சைவ சமயத்தில் மூவர் என அழைக்கபடும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என 63 நாயன்மார்களுடனன் கபாலீஸ்வரர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினர்

  • 63

    பங்குனி உத்தர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பகலிலும், இரவும் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, இரவு கயிலாச பீட ராவண வாகனத்தில் சுவாமியும், காமதேனு வாகனத்தில் அம்பிகையும் பவனி வந்தனர். 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் அலங்காரம், செய்யப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் பவனி வந்தனர். இதைத்தொடர்ந்து, இரவு வெள்ளித்தேரில் உற்சவர் எழுந்தருளினார்.

  • 63

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிமகத்துக்கு பெயர் பெற்ற இக்கோயிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி கோயில் வீதிகளில் உலாவந்தது. அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சுவாமி- அம்பாளும் மங்கள இசைவாத்தியத்தோடு வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. முக்கியவிழாவாக 28ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி மகாமகம் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.