Tag: 5ல்

  • May 05 2022 Indraya nalla neram

    மே 5 – இன்றைய நல்ல நேரம்
    சுபகிருது வருடம் – சித்திரை 22
    05-மே-2022 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    8.57
    நட்சத்திரம்    :    திருவாதிரை    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thirupathy 5 hours dharshan stop

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.  காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
     
    இதில் மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தப்படும்.

    பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது போர்த்தப்பட்டுள்ள பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.

  • march 5 2022 indraya naal

    மார்ச் 5 – சனிக்கிழமை, இன்றைய நல்ல நேரம் 
    பிலவ வருடம் – மாசி 21
    05-மார்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    10.58
    நட்சத்திரம்    :    ரேவதி    அ.கா    4.38
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Dhanvanthri silai vadikka sirappu poojai

    செங்கல்பட்டு மாவட்டம, திருக்கழுக்குன்றம் சாலை, பிரகாஷ் சிற்ப கலைக் கூடம் மாமல்லபுரத்தில் இன்று 11.2.2022, வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் சுக்ல பட்சம், தசமி திதி, திருவோணம் நட்சத்திரம் கூடிய நாளில் திரு. பிரகாஷ் கலைக்கூட உரிமையாளர் ஸ்தபதி திரு. லோகநாதன் அவர்கள் திருக்கரங்களால் கலைமகள், மலைமகள், அலைமகள் என முப்பெரும் தேவியராக விளங்கும் ராஜ வாழ்வு தரும் ராஜமாதங்கிக்கு  5 அடி உயரத்தில் 8 கைகளுடன் பச்சை நிறம் கலந்த பளிங்கு கல்லில் சிலை வடிக்கும் வைபவம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

    மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5 டன் எடையுள்ள பச்சை நிறம் கலந்த பளிங்கு கல்லுக்கு மதுரையில் உள்ள தன்வந்திரி பக்தர்களும், வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி குடும்பத்தினரும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    எட்டு கரங்களுடன் அமையவுள்ள இத்தேவியானவள் இரு கைகளில் வீணை வாசிக்கும் விதமாகவும், கிளி, மலர், அம்பு, அங்குசம், பாசம், கரும்பு மற்றும் வீணை என 6 கைகளில் 6 விதமான பொருட்களுடன் அமர்ந்த கோலத்தில் புன்சிரிப்புடன் அழகிய முகத்துடன் அமையவுள்ளார். 

    இச்சிலையானது இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 89 விக்ரகமாக விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த திரு பிரகாஷ் குடும்பத்தினர், சென்னை அம்பத்தூர் திரு. ராமசாமி குடும்பத்தினர், கரூர் காந்தி கிராமம் திரு. முத்துராஜா குடும்பத்தினர் மற்றும் ஸ்தபதி குடும்பத்தினர், தன்வந்திரி பக்தர்கள் அருகில் உள்ள மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என தன்வந்திரி பீடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஸ்ரீ ராஜமாதங்கி தேவியின் சிறப்பு 

    மதங்க முனிவரின் கடும் தவத்தின் பலனாக அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானிடம்   “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” எனவும், அந்த  “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும்  வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார். அதன்படி திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜமாதங்கி ஆடி மாத வெள்ளிக்கிழமையில் பிறந்தாள். அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். தேவியின் மரகதப் பச்சை வண்ணம் – ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை – சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி – பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு – கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் – அடக்கி ஆளும் திறனையும், கரும்பு – உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.

  • February 05 2022 Vasantha Panchami

    பிப்ரவரி 5 – வசந்த பஞ்சமி
    பிலவ வருடம் – தை 23
    05-பிப்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    8.00
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    இ    8.18
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • January 05 Indraya Rasipalan

    ஜனவரி 5 – இன்றைய ராசிபலன் ….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      சாந்தம் 
    ரிஷபம் –     மேன்மை 
    மிதுனம் –     விவேகம் 
    கடகம் –      போட்டி  
    சிம்மம் –      சாதனை 
    கன்னி –      தேர்ச்சி 
    துலாம் –      ஊக்கம் 
    விருச்சிகம் – அமைதி  
    தனுசு –       மகிழ்ச்சி 
    மகரம் –      ஆர்வம் 
    கும்பம் –     ஆதரவு  
    மீனம் –       பாராட்டு 
    சந்திராஷ்டமம்    –  திருவாதிரை, புனர்பூசம் 

  • January 05 2022 Indraya nalla neram

    ஜனவரி 5 – வடிவீஸ்வரம் பெருமாள் திருக் கல்யாணம்
    பிலவ வருடம் – மார்கழி 21
    வடிவீஸ்வரம் பெருமாள் திருக் கல்யாணம்
    05-ஜன-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    7.06
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    12.59
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Dhanvantri peedam kal garudan

    ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பக் கலைக் கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட மூலவர் விக்கிரகம் மகாபலிபுரத்திலிருந்து கரிக்கோல யாத்திரையாக கீழ்கண்டவாறு வருகை புரிந்து வழியில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வாலாஜா தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிய உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    காலை 6.00 மணி – மகாபலிபுரம்

    காலை 8.00 மணி – திருக்கழுக்குன்றம்

    காலை 10.00 மணி – செங்கல்பட்டு

    காலை 11.00 மணி – வாலாஜாபாத்

    நண்பகல் 12.30 மணி – ஸ்ரீபெரும்புதூர்

    பகல் 1.30 மணி – ஓச்சேரி

    பகல் 2.00 மணி – காவேரிப்பாக்கம்

    மாலை 3.00 மணி – சுமைதாங்கி

    மாலை 4.00 மணி – வாலாஜா டோல்கேட்

    மாலை 5.00 மணி – ஸ்ரீ தன்வந்திரி கோவில், வாலாஜாபேட்டை

     கருட பகவானின் சிறப்புகள்

    பட்சி ராஜாவாக விளங்கும் கருட பகவான் திருமாலின் வாகனமாக விளங்குகிறார். இவர் காச்யபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை ‘பெரிய திருவடி’ என்றும் ஆஞ்சநேயரை ‘சிறிய திருவடி’ என்றும் கூறுவர். வாசுகி என்னும் பாம்பை பூணுலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேஷனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். இவரை தரிசித்து கீழ்கண்ட பலன்களை பெற்று சிறப்பாக வாழ பிரார்த்திக்கின்றோம்.

     கருட பகவனை தரிசிப்பதால் விலகும் தோஷங்கள்

     சர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத் தடை, பூமிதோஷம், வாகனத்தடை, கல்வித்தடை, உத்தியோகத்தடை, ஏழரை சனி தோஷங்கள், வெளிநாடு செல்லும் தடைகள் மற்றும் குடும்ப தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். விஷ்ணுவின் அருள் கிடைத்து நற்கதி அடையலாம். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறலாம். தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரி அற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி. கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

     தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடன் ஆலயத்தின் சிறப்பு

     இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை என்னும் கிராமத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணாபத்யம் எனும் 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவ லிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்து அருள்பாளித்து பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் அமையவுள்ளார் ‘ஓம் ஸ்ரீ தன்வந்திரி கருடாய நமஹ’ என்ற சக்திமிக்க மந்திரத்தை பக்தர்கள் கைப்பட எழுதிய கோடிக்கணக்கான மந்திரங்களைக் கொண்டு அமைய உள்ள பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானுக்கு பாரத தேசத்தில் மிகப்பெரிய ஆலயமாக முதல் முதலில் அமையவுள்ளது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் (ஒற்றைக் கல்லால் ஆனது) வருகிற 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கருட பகவானை தரிசித்து மேற்கண்ட பலன்களை பெற பிரார்த்திக்கின்றோம்.

     மேலும் விவரங்களுக்கு

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

    தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203

  • December 05 2021 Chandra Dharisanam

    டிசம்பர் 5 – சந்திர தரிசனம்
    பிலவ வருடம் – கார்த்திகை 19
    அரவிந்தர் நினைவு நாள்
    05-டிச-2021 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    11.39
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    10.10
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • NOVEMBER 05 2021 Rasipalan

    நவம்பர் 5 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     ஜெயம் 
    ரிஷபம் –     வரவு
    மிதுனம் –     சோர்வு 
    கடகம் –      பயம்  
    சிம்மம் –      உழைப்பு   
    கன்னி –      களிப்பு 
    துலாம் –      நன்மை 
    விருச்சிகம் –       சாதனை 
    தனுசு –       லாபம் 
    மகரம் –      அச்சம்  
    கும்பம் –     ஆர்வம்
    மீனம் –       யோகம்
    சந்திராஷ்டமம்    –    அசுபதி