ஜூலை 2….. இன்றைய நாள் உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?…..
இன்றைய ராசி பலன்
மேஷம் – திறமை
ரிஷபம் – பகை
மிதுனம் – பக்தி
கடகம் – பிரீதி
சிம்மம் – சுகம்
கன்னி – முயற்சி
துலாம் – வரவு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – நட்பு
மகரம் – லாபம்
கும்பம் – நலம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – பூரம்
Tag: 2ஆம்
-
July 2 2021 rasi palan
-
July 02 Indraya nalla neraam
ஜூலை 2 – இன்றைய நல்லநேரம்…..
பிலவ வருடம் – ஆனி 18
02-ஜூலை-2021 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 7.34
நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 8.13
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Kannappa Nayanar Part2

– "மாரி மைந்தன்" சிவராமன்
மறுநாள் காலை
சூரியன் உதிக்கும் நேரம்
இறையனாருக்கு
இரை தேடப் புறப்பட்டார்
திண்ணனார் –
தனக்காக அல்ல
தன்னை வசப்படுத்தியிருந்த இறைக்காக.சிறிது நேரத்தில்
பல்லாண்டு கால
வழக்கப்படி
சிவகோசரியார்
என்ற பழுத்த அந்தணர்
சிவனாரைப்
பூசிக்க வந்தார்.ஆகம விதிப்படி அர்ச்சனை செய்யும் பழக்கமுடைய அந்தணர் தரையில் கிடந்த
மாமிசத் துண்டுகளைக் கண்டு மனம் பதறினார்.யாரோ
ஒரு வன வேடுவன் செய்த பலி, பாவச்செயல்
என சாபம் தந்தார்.நடுங்கியபடியே மாமிசங்களை
ஓரம் தள்ளி விட்டு… அருகில் இருக்கும்
ஓர் அருவி சென்று குளித்துவிட்டு
தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு
வண்ணப் பூக்கள் பறித்து
வாசனைத்திரவியங்கள்
சகிதம் வந்து
பசும் நெய் பூசி
மலர்ச்சூடி
வில்வ இலை தூவி
அபிஷேகம் செய்து
லிங்கேஸ்வரருக்குத்
தூய ஆடைகட்டி
பூஜை செய்தார் அப்புண்ணியவான்.அவர் கிளம்பிய
சில நாழிகைகள் கழித்து திண்ணனார்
வந்து சேர்ந்தார்.முதல் நாள் போலவே செருப்புக் காலால் நாதர்முடி மேலிருந்த மலர்களைத் தள்ளி
வாயில் நிரப்பி வந்த திருமஞ்சன நீரால் அபிஷேகம் செய்து
ஊனமுது படைத்தார்."ஐயனே…!
நானே பக்குவமாய்
தீயிட்டுச் சமைத்தேன்.
தேனிட்டுச் சுவைத்தேன்.நேற்றதை விட
இன்றைய மாமிசம்
ருசியாய் இருக்கும்.
உனக்கும் பிடிக்கும்…சாப்பிடு. "மனம் உருகிச் சொன்னார் தன்னை மறந்த திண்ணனார்.
கதிரவன் மறைந்து
இரவு வரவே
அன்றிரவும்
காவல் காத்தார்
ஒரு நொடி கூட
இமை மூடாது.இப்படியே சென்றன
ஐந்து நாட்கள்.இதற்கிடையில்
ஒரு நாள்
நாணன், காடன்
கூற்றை ஏற்று
தந்தை நாகன் வந்தான் ஒரே வாரிசான திண்ணனாரிடம்.கெஞ்சினான்.
கொஞ்சினான்.
ஆனால்
கொஞ்சமும் மசியவில்லை
மந்திரித்து விட்டவர் போலிருந்த திண்ணனார்.வேறு வழியின்றி கண்ணீரோடு விடைபெற்றான்
தந்தை நாகன்.தினமும் நடக்கும் அசிங்கங்களையும் அலங்கோலங்களையும்
ஐந்து நாட்களுக்கு மேல்
சிவகோசரியாரால் பொறுக்க முடியவில்லை.
அழுது புரண்டு ஆண்டவரிடம்
புலம்பித் தீர்த்தார்."தயாநிதியே…!
உன்னருகே அசிங்கங்களைக் காணுமாறு
என்னை ஏன் படைத்தாய்?அப்படி என்ன பாவம்
நான் செய்துவிட்டேன்?புழுத்த நாயினும் கடையனாகிப் போனேனோ ?"
வீடு திரும்பி
பிதற்றிய
வண்ணம் இருந்தார்.கருணாமூர்த்தி
அன்றிரவு அவர்
கனவிலே தோன்றினார்."சிவகோசரியாரே…!
என் மனதில் என்றும் நிலைத்து இருப்பவரே !!இது என்
விளையாட்டு தான்.கவலை கொள்ளாதீர்.
நாளை காலை
உன் பூசை புனஸ்காரங்களை முடித்துவிட்டு மறைந்திருந்து
நடப்பதைக் கவனி.உன் கேள்விகள் அனைத்துக்கும்
விடை கிடைக்கும்.அதற்கு முன் சில வார்த்தைகள்.
ஊன் உணவு
படைப்பவனை
வெறும் வேடுவன் என்று நினைத்து இகழாதே.அவன் படையல்
உன் ஆகமப் படையலை
விட உயர்ந்தது.அவன் உருவம்
என் உருவே.அவன் அன்பு
என் மீதான அன்பே.
என் அன்பே.அவன் அறிவு
என்னை அறியும் அறிவே.அவன் பூஜிக்கும் பூக்கள் தேவர்கள் வைத்து வணங்கும் மலர்களை
விட உயர்ந்தவை.அவனது மெய்யன்பு பேரன்பு.
இதுவரை நான் கூட அனுபவித்திராதது.நாளை சந்திப்போம். மறைந்திருந்து கவனி. அவனது மெய்யன்பின் பேரணியை."
காளத்தியார்
கண்கள் போராளியூட்ட விடைபெற்றார்.மறுநாள்
ஆறாம் நாள் காலை.ஆவலோடு வந்தார்
சிவகோசரியார்.மலையரசனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு மறைவிலிருந்து காத்திருந்தார் சிவக்கொழுந்தர்.
அன்று
வேட்டையாடப் போன
திண்ணனாருக்கு
மலைச் சாரலில்
சில இடங்களில்
உதிரம் கொட்டிக் கிடக்க
அவை கெட்ட சகுனங்களாக
மனதைக் குழப்பின.'தீது தனக்கா ?
தனையாளும் இறைவனுக்கா ?'
எனப் புரியாது கலக்கமுற்ற திண்ணனார் 'இறைவனுக்கு என்றால் என்னாவது?' என அஞ்சி விரைந்தோடி வந்தார் உச்சி மலையில் அருள்பாலித்துக் கொண்டிருந்த
குடுமித் தேவரிடம்.விரைந்து வந்த திண்ணனார்
லிங்க பகவானைச்
சுற்றிச் சுற்றி வந்தார்.பழுது ஏதும்
ஏற்பட்டுள்ளதா என பலமுறை
உற்றுப் பார்த்தார்.ஊன்றிக் கவனித்த போது இறைவனின்
வலது கண்ணிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.துடிதுடித்துப் போனார் கரடிகளையும் காட்டெருமைகளையும்
துடிதுடிக்கச் சாகடிக்கும்
வேடுவர் திண்ணனார்.அவர் கண்களில் அலை அலையாய் கண்ணீர்.
'யார் செய்த தீங்கு இது?'
சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சிறிது தூரம் சென்றும் தேடித் தேடிப் பார்த்தார்.
யோசனை வந்தவராய் மேலும் சில தூரம் சென்று தானறிந்த மூலிகைகளை கசக்கிய வண்ணம்
இறை அருகே ஓடிவந்து மருத்துவம் பார்த்தார்.இரத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது. மூலிகைச் சாறும் பலனளிக்காது
குருதி அதிகமானது.அதுபோது இளம்பிராயத்தில் கற்பித்தவர் சொன்ன சொலவடையான
'ஊனுக்கு ஊன் உற்ற நோய் தீர்க்கும்'
என்பது
நினைவுக்கு வந்தது.உடனே அம்பு எடுத்தார்.
தனது வலக் கண்னை தோண்டி எடுத்து
கைகள் நடுங்கியபடி இறைவனின்
குருதி பொங்கிய
வலது கண்ணில் பொருத்தினார்.என்ன ஆச்சரியம்!
அப்படியே பொருந்தியது அவர் கண்ணும் இறையின் கண்ணும் ஒன்று என்பதுபோல்.

நிம்மதி பெருமூச்சு விட்டவர் தன்
கண், ரத்தம், வலி உணர்ந்தாரில்லை.இறைவனின்
வலது கண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த
இரத்தப் பெருக்கு நின்றது.திண்ணனாரும்
மறைவில் இருந்த சிவகோசரியாரும் மகிழ்ந்தபடி வணங்கியிருந்த நொடிகளில்….இறைவனின்
இடது கண்ணிலிருந்து இரத்தம் பீறிடத் துவங்கியது.இப்போதும்
திண்ணனார் யோசிக்கவில்லை.
தனது இடது கண்ணை பெயர்த்தெடுக்க முற்பட்டார்.அப்போது அவருள்
ஒரு கேள்வி எழுந்தது.ஏற்கனவே
வலது கண்
பார்வை இழந்த நிலையில்
இடது கண்ணையும் எடுத்துவிட்டால் இறையுடன்
பொருத்த வேண்டிய
இடம் தெரியாதே!
என்ன செய்வது?யோசித்த
அதே கணத்தில்
பதிலும் கிடைத்தது.தனது
ஒரு காலைத் தூக்கி
இறையின்
இடது கண்ணில்
கால் விரலை
ஒற்றி வைத்துக் கொண்டார்.கால் விரல் இருக்கும் இடத்தில்
தன் கண்ணைப் பொருத்தி விடலாம்
எனக் கருதி
அகமகிழ்ந்து
இடது கண்ணை
பெயர்த்தெடுக்கப் போனார்.இறைவனுக்கே
அது பொறுக்கவில்லை."நில்லு கண்ணப்ப!
நில்லு கண்ணப்ப!!
என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!!!"
என்று மூன்று முறை அன்பொழுக அழைத்து
தடுத்து நிறுத்தினார்
காளத்தியப்பர்.உடன்
திண்ணனாரை ஆட்கொண்டு
'என் வலப்பக்கம்
எப்போதும் இரு' என ஆசீர்வதித்து
வாரி எடுத்து
இறுகணைத்துக் கொண்டார் உலகாளும் திருக்காளத்தி நாயகன்.இறைவனே
மூன்றுமுறை அழைத்ததாலேயே திண்ணப்பர்
கண்ணப்பர் ஆனார்.சிவகோசரியார்
'கருணைப் பெருங்கடலே..
பேரன்பின் பெரு ஊற்றே' என்று இறையோடு கலந்த கண்ணப்பரையும்
நினைவு தெரிந்த நாளிலிருந்து நொடிதோறும் தொழும் காளத்தியாரையும்
ஒரு சேர வணங்க இருவரும் வானேகினர்
வானவர் பூமழை பொழிய,முக்கண்ணருக்கே
இடது கண் கொடுத்த
இரு கண்களையும்
தர விருந்த
கண்ணப்ப நாயனாரை காலமெல்லாம்
உலகம் மாந்தரும்
உலவும் ஞானியரும் தொழும் ரகசியம் இதுவே.கண்ணப்ப நாயனார் மூலம்
இறை விடுக்கும்
ஆன்மிக அறிவிப்புகள் கூர்ந்து
கவனிக்கத்தக்கன.அகம்பாவம் என்னும் தப்பியோடிய காட்டு பன்றியைக்
கொன்றதன் மூலம்
அகம்பாவம் அழித்தார் கண்ணப்ப நாயனார்.
அதனால் உயர்ந்த பக்தி உற்பத்தியானது
அடுத்த நிகழ்வு.உடன் வந்த
நாணனையும் காடனையும்
நன்றும் தீதும்
எனக் கொள்ளலாம்.தீது எனும் காடன் காட்டுப்பன்றியை அவித்ததோடு
ஆற்றோடு
பின்தங்கிப் போனான்.நன்று என்னும்
நாணன்
இறைவனின் பெருமையை எடுத்துரைக்க முடிந்ததே தவிர
அவனால் துந்துபி ஓசையைக்
கேட்க முடியவில்லை. இடையிலேயே விடைபெற்றது
யோசிக்கத் தக்கது.சாதகரான
கண்ணப்பர் மட்டுமே இறை அழைக்கும்
பேறு பெற்றார்.
என்றும் இறையின்
வலப்பக்கம் இருக்கும்
பெரும் பேறு பெற்றார்.கண்ணப்ப நாயனாரின் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த பக்திக்கு முன்னர்
ஆன்மிகம் செறிந்த சிவகோசரியாரின்
வெறும் சடங்குகள்
அடுத்த நிலைக்கே சென்றது.உண்மை பத்தி
சடங்குகளைக் காட்டிலும் உயர்ந்தது என்பதே இறை
உணர்த்தும் உண்மை.ஆகம நெறியிலும்
அன்பு நெறியே சிறந்தது.கண்ணப்பரின் பக்தி
மூட பக்தி அல்ல.
அது அன்பின் ஊற்று.இறைவன்
காட்சியளித்த போது
கண்ணப்பர்
இறைவன் முன்பு நின்றிருந்தார்.
சிவகோசரியாரோ மறைவாக
மரத்தின் பின் தான் நின்றிருந்தார்.இறைவன்
எத்தனை காலம் தன்னைத் தொழுதான் எனக் கணக்குப் பார்ப்பதில்லை.
ஆறே நாளில் கண்ணப்பரை அரவணைத்தது கண்கூடு.தத்துவப் படிகளைத் தாண்டி
சிவ தத்துவத்தை சென்றடைந்த
கண்ணப்பரின்
ஊனமுதை இறைவன் வெறுக்கவில்லை.
இது கண்ணப்பரின் சரணாகதி
தத்துவத்தின் வெற்றி.இவையால் தான்
கண்ணப்பரின் புகழ் பாடாத ஆன்றோரோ சான்றோரோ இல்லை.'நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்' எனப் பாடுகிறார் பட்டினத்தார்.
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'
என்று முக்கண்ணரிடம் வாதப் போர் புரிந்த நக்கீரத் தேவர் 'திருக்கண்ணப்ப தேவர் மறம்' என்ற நூல் அருளியிருக்கிறார்.சமயக் குரவர் நால்வரும் அருணகிரியாரும் ஆதிசங்கரரும் தாயுமானவரும்
கண்ணப்பரின் மெய்யன்பைப் போற்றி வணங்குகின்றனர்.'கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்'என்பது சுந்தரரின் திருவாக்கு.
திருச்சிற்றம்பலம்.
(கண்ணப்பர் நாயனார் புராணம்- முடிவுற்றது)
-
June 2 Rasi palan today
ஜூன் 2…. இன்றைய நாள் எந்த ராசிக்கு என்ன பலன்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – இன்பம்
ரிஷபம் – நிறைவு
மிதுனம் – தனம்
கடகம் – பயம்
சிம்மம் – கோபம்
கன்னி – போட்டி
துலாம் – பெருமை
விருச்சிகம் – செலவு
தனுசு – சுகம்
மகரம் – நன்மை
கும்பம் – வெற்றி
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம்
-
JUNE 2 THIRUPATHI FESTVAL
ஜூன் 2 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
பிலவ வருடம் – வைகாசி 19
02-ஜூன்-2021 புதன்
திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 6.26
நட்சத்திரம் : சதயம் இ 9.59
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Enadi nadha nayanar puranam part 2

– "மாரி மைந்தன்" சிவராமன்
மறுநாள்
ஏனாதி நாதருக்கு
ஒரு செய்தி அனுப்பினான்
அதிவீரன்."எதற்கு
அனாவசியப் போர் ?அப்பாவிகள் ஏன்
உயிர் விட வேண்டும்??நமது இருவருக்கும்
தானே பகை ?பக்கத் துணை யாருமில்லாமல்
போர் செய்வோம்.நானும் தனித்து வருகிறேன்.
நீயும் தனியாளாய் வா.ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடுவோம்
ஒரு கை.ஊர் எல்லையில்
இருக்கும்
காட்டுப்பகுதியே
சண்டைக் களம்.வென்றவர் மட்டுமே
வருங்காலத்தில்
வாட் பயிற்சிக்கு வாத்தியார்"
என்பதே வந்த ஆள் சொன்னார்
போர்முரசின் சாராம்சம்.சொன்ன நாளில்
குறித்த நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தார்
ஏனாதி நாதர்.தனியாளாக
வருகிறானா…
இல்லை…
காட்டில் பலரை முன்னேற்பாடாக
ஒளித்து வைத்திருக்கிறானா
என நினைத்தாரே தவிர ஆயிரம் பேர் வந்தாலும் எதிர் கொள்ளத்
தயாராக இருந்தார் ஏனாதிநாதர்.அதிசூரனும்
அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான்.ஆனால் அதை விட
ஒரு பெரும் சூழ்ச்சியின் சூட்சமம்
அவனுள்
பொறி தட்டியதால்
அத்திட்டத்தைக் கைவிட்டான்.ஏனாதிநாதர்
நாற்புறமும்
பார்வையைச் சுழற்றியவாறே காத்திருக்க
அதிசூரன்
ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயத்துடனும்
தனித்தே வந்தான்.ஆனால்
ஏனோ முகத்தை கேடயத்தால் மறைத்தபடி
வந்தான்.அவனைப் பார்த்த மாத்திரத்தில்
ஓ(ம்)வென கத்தியவாறே அவன்மீது
புலி போல் பாய்ந்தார் ஏனாதி நாதர்.கேடயம் அவன்
முகம் விட்டு நழுவியது.முகத்தில் திருநீறு.
அதுவும் மூன்று கீற்று.ஏனாதி நாதருக்குப் போரிடத் தோன்றவில்லை.
'திருநீறு அணிந்து
சிவன் ஆகிவிட்டவனிடம் வாட்போரா…?தவறு…. தவறு
நல்லவேளை வாளை வீசாதிருந்தேன்'
கேடயத்தையும் கூர்வாளையும்
தாழ்வாக்கி
அதிசூரனைப் பார்த்து புன்னகைத்தார் ஏனாதிநாதர்.
திட்டம் பலித்து விட்ட மகிழ்வில்
ஏனாதி நாதரை
வாள் வீசி
கொல்லத் துடித்தான் அதிசூரன்.அவன் அப்படி
செய்து விடுவானோ என ஏனாதிநாதரும் பயந்தார்.ஒரு சிவ வடிவில் இருப்பவருக்கு
கொலை செய்த
பழிபாவம் வந்துவிடுமோ என தான்
ஏனாதியார் பயந்தார்.சிவ பக்தனுக்குத்
தோஷம் வந்துவிடக்கூடாது
என்று அஞ்சிய
ஏனாதி நாதர்
போர் புரிபவர் போல் கொஞ்சம் நடித்தார்.சும்மா போரிட்டபடியே
அவனிடம்
தன் எண்ணம் சொல்லி இனிமேல் அவனே
வாள் வித்தை கற்பிக்கட்டும்
என்று உறுதி சொல்லி
வாட் போரை
நிறுத்தி விடலாம்
என நினைத்தார்.ஆனால் ஆத்திரக்காரனுக்குப்
புத்தி மட்டு என்பதை உறுதியாக்கும் வகையில்
ஏனாதி நாதரின்
நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அதிசூரன்
அதிவீரன் போல்
ஏனாதி நாதரை
வாள் வீசிக் கொன்றான்.ஜெயபேரிகை
கொட்டிய வண்ணம்
ஊராரிடம்
தம்பட்டம் அடிக்க
ஊருக்கு விரைந்தான்.அப்போது செஞ்சடை மின்னலிட வெளிப்பட்டார் இந் நாடகத்தின் இயக்குனர்
சிவபிரான் தேவியோடு."வெண் திருநீறு அணிந்தவரெல்லாம் சிவவடிவம் என
எப்பேதமுமின்றி
பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
ஏனாதி நாதரே!எனதன்பு
ஏனாதி நாத நாயனாரே!விழித்திடு. எழுந்திரு."
ஆண்டவனின் கட்டளையை
அப்படியே ஏற்றார்
ஏனாதி நாத நாயனார்.உயிர் பிழைத்து
உயிர்ப்போடு எழுந்து
தாள்பணிந்து
இறை வணங்கி நின்றார்."மெய்யன்பரே…!
வஞ்சகனின்
சூதை மீறி
திருமண் அணிந்திருந்ததாலே அவனை
என் போல் பாவித்து கொலை ஏற்று
உலகப் பாசம்
அறுத்த அருளாளரே…!நீர் என்றென்றும்
எம்மை விட்டுப் பிரியாத வாழ்வைப் பெறுவாயாக!வா….
சிவபுரி செல்வோம்."என அழைத்தார்
சிவபுரித் தலைவர்.காட்டிலிருந்த
ஓரறிவு முதல்
ஐந்தறிவு வரையிலான ஜீவிகள் அனைத்தும்
வியந்து பார்க்க வானிலிருந்து விழுந்த மலர்களை நுகர்ந்தபடி
விண்ணில் பறந்து மறைந்தார்
ஏனாதி நாத நாயனார்.'வேடநெறி நில்லார்
வேடம் பூண்டு
என்ன பயன் ?'
என்ற திருமூலர் வாக்குப்படி
சிவனடியார் போல்
பொய் வேடம் பூண்ட அதிசூரன்
ஊர் தூற்ற வாழ்ந்து பின்னரும் நரகத்தில் துன்பமுற்றான்
என்கிறார்
வாரியார் சுவாமிகள்.கிபி 660-840 வாக்கில் இயற்பகை நாயனார் இளையான்குடி நாயனார் ஏனாதி நாத நாயனார் வாழ்ந்ததாக ஓர்
ஆய்வுக் குறிப்பு உள்ளது.'ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.
திருச்சிற்றம்பலம்.
(ஏனாதிநாத நாயனார் புராணம்- முடிவுற்றது)
-
Amar needhi nayanar part 2

– "மாரி மைந்தன்" சிவராமன்
இறையனார் தந்து
அமர் நீதி நாயனார் தொலைத்த
கோவணப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது."ஐயன்மீர்….!
தாங்கள் தந்த
கோவணம் காணவில்லை.
எங்கு எவ்வாறு மறைந்தது நானறியேன்.
இது என் அறியாப் பிழை.தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டும்.
வேறு கோவணம் தருகிறேன்.
புத்தம் புதிதாய்த் தருகிறேன்.ஆடையைக் கிழித்து பிரித்தது அல்ல
நான் தரும் கோவணம்.
பிரத்தியேகமாக கோவணமாகவே நெய்ததைத் தருகிறேன்.அடியார்கள் பாராட்டிய வெண்மை மிக்க கோவணம் தருகிறேன்."
அழுதபடி நின்றார் அமர்நீதியார்.
சிவனுக்கு
சினம் மிகுந்தது.
கோபம் கொப்பளித்தது.
அதனால் வார்த்தைகள் அதிரடியாய் தெறித்தன."என்ன நீ…
ஏதேதோ கதை சொல்கிறாய்.நான் தரும்போது
பெரும் சிறப்பு கொண்ட கோவணம் என்றதால் வேறொன்று கொடுத்து என்னுடையதைக்
கவரப் பார்க்கிறாயா ?இதுதான் உன்
வணிக லட்சணமா ?அமர் நீதியாருக்கு மயக்கமே வந்தது.
"அந்தணரே…
என் பிழையைப் பொறுத்தருள்வீர் ..!! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.பொன் பொருள்
வைரம் ரத்தினம்
பட்டாடை எது வேண்டுமானாலும் கேளுங்கள்.தருகிறேன்"
ஒரு முறை அல்ல,
பல முறை கெஞ்சினார்."ரத்தினங்கள்
எனக்கு எதற்கு ?
அவற்றை வைத்து
நான் என்ன செய்யப் போகிறேன் ?
எனக்கு என் கோவணம் தான் வேண்டும்" விடாப்பிடியாய்
அடம் பிடித்தார் அந்தணர்.இதை கண்ணுற்ற
அமர் நீதியார்
உற்றார் உறவினர் கண்கலங்கிக்
குமுறி அழுதனர்."சரி… சரி….
வேண்டுமானால்
இந்த ஈர கோவணத்திற்கு ஈடாக
வேறு கோவணம் தா.அது இதன்
எடைக்கு ஈடாக இருக்கவேண்டும்."
கொஞ்சம் இறங்கி
வந்தார் இறைவனார்.ஒரு தராசு
கொண்டு வரப்பட
அதில் ஒரு தட்டில் தன் ஈரம் உலர்ந்த கோவணத்தை வைத்தார்.மறு தட்டில்
மனம் கலங்கியபடி தன்னிடமிருந்த உயர்ந்த பட்டுக் கோவணத்தை வைத்தார் அமர் நீதியார்.அப்போது அந்தணரின் தட்டு கீழிறங்கி
ஈடில்லை
எனக் காட்டியது.தன்னிடமிருந்த
அடுத்த கோவணத்தை தட்டில் வைத்தார்.அந்தணரின் தட்டு எழவில்லை.
துடித்துப் போன
அமர் நீதியார்.
அடுத்து அத்தனை கோவணங்களையும்
தன் தட்டில் வைத்தார்.
அது போதும் அவர் தட்டு இறங்கவில்லை.ஆடைகள் துணிமணிகள் பட்டு பீதாம்பரங்கள்
என பலவற்றை வைத்தார். தட்டு தள்ளாடியதே
தவிர தரை நோக்கவில்லை.'புவனம் எல்லாம் வைத்தால் கூட
அந்தணரின் கோவணத்திற்கு ஈடாகாதோ' எனக் கலங்கிய அமர் நீதியார் இறுதியில் அடியாரின் திருவடிகளைப் பிடித்தார்."சுவாமி….!
இனி என்னிடம்
கொடுக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும்
தந்து விட்டேன்.என் மனைவி மகன்
நான் மட்டுமே பாக்கி."அந்தணர் மௌனம் சாதித்தார்
பொய்க்கோபம்
காட்டியபடியே!
"இதோ அவர்களையும் தருகிறேன்."
மனைவியும் மகனும் தட்டேறினர்
சிவநாமத்தை
விடாது ஜெபித்தபடி.அதற்கும் பலன் இல்லை. இரு தட்டுகளும்
சமமாகவில்லை.பொறுமையை இழந்தார் பொன்மனச் செம்மல்
அமர் நீதி நாயனார்.இனி
அவர் மட்டுமே மீதி.கண்ணிறைந்த இறைவனைத் தொழுதபடி கண்களில் நீரைச் சுரந்தபடி
ஐந்தெழுத்தை உச்சரித்தபடி
தானும் தட்டு
ஏறத் தயாரானார்."இறைவா…!
அன்பர் துயர் தீர்க்கும் அருளாளா !!என் அன்பு உண்மையெனில்
என் சிவ சேவை உண்மையெனில்
என் அடியார் சேவையில்
பிழை நேர வில்லை என்பது உண்மையெனில் என் அடிமைத் திறம்
பழுதில்லை என்பது
உண்மையெனில்
என் மீதிருக்கும்
பழியைத் தீர்த்து வை."கண்ணீர் பெருக்கெடுத்து விழி நிரப்பி
கரைபுரண்டு ஒட
தன் தட்டின் மீது
ஏறி நின்றார்
'சிவாயநம.. சிவாயநம' என்று ஒலித்தபடி.என்ன ஆச்சரியம்!
இரு தட்டுகளும்
நேர் நின்றன.கவலையோடு
சூழ்ந்திருந்தத
அத்தனை பேரும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.அடுத்த ஆச்சரியம்
உடனே நிகழ்ந்தது.வானிலிருந்து
பூமாரி பொழிந்தது.
தேவர்களின்
மறை இசை
தேவகானமாய்
நல்லூரில் ஒலித்தது.அதற்குப் பின்னரும் மற்றொரு ஆச்சரியம்!
வம்பிழுக்க வந்து
வம்பிழுத்து வந்த
சிடு சிடு அந்தணர்
திடுதிப்பென
மாயமாய் மறைந்தார் அனைவர் கண் எதிரிலேயே!
அடுத்து நடந்தது அதிசயமே வியக்கும் அதிசயம்!
அது கணமே
இறைவனும் இறைவியும் ஒளிவெள்ளத்தில்
ரிஷப வாகனத்தில் ஒருசேரக் காட்சியளித்தனர் வான்வெளியில்.மங்கையொருபாகன் மனம் நெகிழ்ந்து பேசினார்
அமர் நீதி நாயன்மாரும்
நல்லூர் மக்களும்
ஆச்சரியத்தில் திளைக்கும் படி."அன்பரே….!
அமர்நீதியாரே…!
சிவ சேவை
அடியார் சேவை அன்னதானம்
இம்மூன்றும்
அற்புதமானவை.
எதற்கும் ஈடிலாதவை.எதிர்த்தட்டில்
நானே நின்றிருந்தாலும் நீயே வென்றிருப்பாய்.இறையன்பு
இறைவனை விட உயர்ந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கவே இந்த நாடகம்.அமர் நீதியே!
நீ உன் மனைவியுடனும் மைந்தடனும் என்னுடனேயே
சிவபுரம் வாருங்கள்"
என ஆசிர்வதித்தபடி
மறைந்தனர்
மறை நாயகனும்
இறை நாயகியும்.அடுத்து நடந்தது தான் உலகம் கண்டிராத பேராச்சரியம் !
தராசு அப்படியே
புஷ்பக விமானமாக மாறி
விண்ணில் பறக்க ஆரம்பித்தது.அமர்நீதியாரும்
அன்பு மனைவியும் ஆருயிர் மைந்தனும் தேவகணங்கள் வரவேற்க சிவபுரம் அடைந்து சிவானந்தப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.நீதியே இவரை
விரும்பி வந்ததால் அமர்நீதி என பெயர் பெற்றார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.அமர்தல் என்பதன் பொருள் விரும்புதல் என்பதாம்.
அமர்நீதியார் புராணத்தை ஊன்றிக் கவனித்தால்
சில ஆன்மிக உண்மைகளை
உணர முடியும்.ஆண்டவனைக் காண அனைவரும் செல்வர்.
ஆனால் அடியவரைக் காண அரனாரே வருவார்.உள்ளம்கவர் கள்வனாகக் கடவுளைப் பாடுவர்.
ஆனால் இறைவன்
அமர் நீதி நாயனாரைக்
கள்வன் ஆக்கினார்.இறைவனின்
தராசுத் தட்டில்
ஆண்டவர் அருள் முன்பு அடியார்
இறையன்பு தாழும்.
அன்பு மேலிட மேலிட அருள் தட்டு உயர்ந்து
கொண்டே போகும்.
அன்பு தான் பெரிது.
அருள் துணை வரும்.இறைவன்
உறைவதும்
ஆனந்த நடனம்
ஆடுவதும் திருமடம்.
தவத்திற்கும் தியானத்திற்கும்
அதுவே சிறப்பிடம்.
அன்னதானமே
அங்கு முதலிடம்.அமர்நீதி நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தொண்டர் தொகையில்,
'அல்லிமென் முல்லையந்தார்
அமர்நீதிக்கு அடியேன்' என அகமகிழப் பாடுகிறார்.அன்பே சிவம்.
(அமர்நீதி நாயனார் – முடிவுற்றது)
-
May 2 Sasti naal
மே 2 – சஷ்டி
பிலவ வருடம் – சித்திரை 19
02-மே-2021 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 8.57
நட்சத்திரம் : பூராடம் ம 2.37
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
May 2 Sasti naal rasi palan
மே 2 … சஷ்டிநாள் ராசி பலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – அமைதி
ரிஷபம் – பொறுமை
மிதுனம் – நஷ்டம்
கடகம் – அனுகூலம்
சிம்மம் – வெற்றி
கன்னி – மேன்மை
துலாம் – தெளிவு
விருச்சிகம் – நலம்
தனுசு – சாந்தம்
மகரம் – நன்மை
கும்பம் – வரவு
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருடம் -
April 2 Goodfriday rasipalan
ஏப்ரல் 2…… இன்று இந்த ராசிக்கு லாபமான நாள்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – செலவு
மிதுனம் – லாபம்
கடகம் – வரவு
சிம்மம் – போட்டி
கன்னி – ஆர்வம்
துலாம் – பகை
விருச்சிகம் – மறதி
தனுசு – பாராட்டு
மகரம் – சினம்
கும்பம் – கவனம்
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – பரணி