Tag: 1008

  • Punnai Nallur Mariamman vilaku poojai

    வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும், பருவமழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இல்லங்களில் திருமண தடைகள் நீங்கவும், சுமங்கலி பெண்களின் தாலிபாக்கியம் நிலைக்கவும் 1008 பெண்கள்  குத்துவிளக்கேற்றி கூட்டு வழிபாடில் ஈடுபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்.

  • 1008 Paal Kudam

    சென்னை போருர் அருகே ஸ்ரீ துர்கையம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு  1008 பெண்கள்  பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர்.

    சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கை ஆம்மன் ஆலயத்தில் சித்திரா பவுர்ணமி விழா கொண்டாப்பட்டது.விழாவை முன்னிட்டு 1008 பெண்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    அயன்பந்தாங்கள் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மன் கோவிலில் புறப்பட்ட பால் குட ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலை வழியாக ஆயத்தை வந்தடைந்து. பின்னர் துர்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • thiruverkaadu-ammanuku-indru-1008-sangabishegam

    கருணையே வடிவாய் காட்சித்தரும் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்தால் மலைபோல் வரும் துயர் யாவும் பனிபோல் விலகிவிடுவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் கருமாரித்தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம் என்பது ஐதீகம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.
    மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்று வருகின்றனர். மேலும் தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன. 

    இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிஷேகம், நவகலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரம், 108 பால் குடம், படையல் போன்றவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (31-07-2018) அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுவதற்கு திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.