Tag: 1008

  • Karaikal nandeeswarar temple sangabishegam

    காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு நித்தீஸ்வரம் ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


       
    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு  அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து பால்,தயிர், மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களினால் சிவனுக்கும்,அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த நீரினால் சிவனுக்கும், அம்பாளுக்கும்  அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்வித்து மகாதீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாதம் 03வது சோமவாரம் 1008 சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Tanjai periya koil 1008 sangabishegam

    கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம்  நடத்தப்பட்டது.

    இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு பால், சந்தனம் , மஞ்சள்  , அன்னம்,  விபூதி உள்ளிடட் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்   செய்யப்பட்டது . பின்னர் பெருவுடையாருக்கு முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட   1008 சங்குகளை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

    அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற -ந்தேதி 27-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி 3-வது சோமவாரமும், 11-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

  • Vinayakar ilaneer

    கத்ரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி இன்று கும்பகோணம் மடத்து தெரு பகவத் விநாயகருக்கு 1008 இளநீரால் அபிஷேகம்.

    கத்ரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் தொடர்வதால், இக்காலகட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும்,கடும் வெயில் நாள் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க வேண்டியும், கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள தொன்மையான பகவத் விநாயகருக்கு  இன்று 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து தயிர் சாதத்தால் பள்ளையயும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  • 1008 vilakku poojai

    சேலம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை முதல் நாளில் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழா தொடங்கியது ஐம்பதாவது பொன்விழா ஆண்டான இந்த ஆண்டில் அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டன குறிப்பாக தை முதல் நாள் அன்று விக்னேஷ்வர பூஜை கோ பூஜை அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த சக்தி அழைக்கும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் உடலில் கத்திப்போட்டுக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் தொடர்ந்து இரண்டாம் நாள் நேற்று ஸ்ரீ சாமுண்டி அழைப்பு உள்ளிட்ட சிறப்பு வைப்பவங்கள் நடைபெற்றன

    இதனை தொடர்ந்து ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் திருமண பாக்கியம் வேண்டியும் திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது இந்த திருவிளக்கு பூஜையில் 1008 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டனர்.

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். எனவே திருவிளக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் சகல வித செல்வங்களும் திருமண பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க சுமங்கலி பெண்கள் பூக்கள் மற்றும் குங்குமத்தால் திருவிளக்கு பூஜை செய்தனர் பிறகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

  • Tanjore 1008 sangabishegam

    கார்த்திகை சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில்,  பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.  மேலும், இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோமவார தினத்தில், பிரதோஷ வைபவம் என்பதால், அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

  • bagavat vinayakar 1008 valampuri sangu abishegam

    கார்த்திகை மாதம் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பகவத் விநாயகருக்கு 1008 வலம்புரி சங்குகளால்  அபிஷேகம். சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கும்பகோணத்தில் உள்ள முக்கிய விநாயகர் ஆலயங்களில் ஒன்று பகவத் விநாயகர் ஆலயம். இவ்ஆலயத்தில்  கார்த்திகை மாதம் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று இரவு 1008 வலம்புரி சங்குகளால் பகவத் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து பகவத் விநாயகருக்கு தீபாரதனைகள் நடைபெற்றது. முன்னதாக உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • tanjore thousand sangabishegam

    தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கார்த்திகை மாத முதல் சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில்,  பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும், இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோமவார தினத்தில், பிரதோஷ வைபவம் என்பதால், அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல, வரும் 28ம் தேதி இரண்டாவது, டிசம்பர் 5ம் தேதி மூன்றாவது, டிசம்பர் 12ம் தேதி நான்காவது சோமவாரம் நடைபெறுகிறது.

  • mazhai vendi ilaneer abishegam

    மழை வர வேண்டி சென்னை பூந்தமல்லி ஊத்துகாட்டு எல்லை அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. வருகின்ற கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கு மழை வர வேண்டி ஆங்காங்கே சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு வருகின்றன. 

    இந்நிலையில் மழை வர வேண்டி சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஊத்துகாட்டு எல்லையம்மனுக்கு கோவில் தர்மகர்த்தா ஞானம் தலைமையில் அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைப்பெற்றது. 

    இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தலையில் இளநீர் ஏந்தியவாறு  ஊர்வலமாக நடந்து வந்து ஊத்துகாட்டு எல்லையம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
     

  • 1008 Kalasa theertham thirumanjanam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு வருகிற 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, உலக மக்கள் நலனுக்காக மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 1008 கலசதீர்த்த திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி லேகியம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

    தீபாவளி மருந்தும், தன்வந்திரி சிறப்பும் :

    மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

    ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

    காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

    இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    தன்வந்திரி ஜெயந்தியன்று மாலை பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்கள் சேர்கப்பட்டு, நோய் தீர்க்கும் தன்வந்திரி மஹா மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இந்த லேகியம் தயாரித்து, ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மந நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.

    மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று 78 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் தரிசித்து இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • Ulaga Nanmai vendi 1008 vilakku poojai

    சிவகங்கை அருகே உள்ள சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீகொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் வேண்டியும் 1008திருவிளக்கு பூஜை வழிபாடு  விமரிசையாக நடைபெற்றது.

     ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது  தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடு சிவாச்சாரியார்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை நடத்தினர்.

     பூஜையில் 1008 சகசரநாம அர்ச்சனை 108 மகாலட்சுமி மற்றும் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.