Blog

  • மே 14 – இன்றைய நல்லநேரம்….

    மே 14 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – வைகாசி – 01
    மே 14, 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சஷ்டி கா 6.21
    நட்சத்திரம் :  பூரம் மா 4.15
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ கொடியேற்றம்…

    கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் ஆகும்.

     இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பாம்பு வாகனம், அன்னப்பறவை வாகனம், பச்சைக்கிளி வாகனம், காமதேனு வாகனம்,  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 17 ஆம் தேதி 5 ஆம் நாள் தன்னைத்தான் வழிபடுதல் காளை வாகனத்தில் இறைவர் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலா 7 ஆம் நாளான 19 ஆம் தேதி திருக்கல்யாணம் 9 ஆம் நாளான 21 ஆம் தேதி கட்டுத் தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • திருவாரூர் | எண்கண் அருள்மிகு ஆதிநாராயணபெருமாள் திருக்கல்யாணம்

    திருவாரூர் | எண்கண் அருள்மிகு ஆதிநாராயணபெருமாள் திருக்கல்யாணம் 

     

  • மே 13 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – அமைதி
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     – புகழ்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   அனுகூலம்   
    கன்னி         –    உதவி
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     ஆசை
    மகரம்         –    உயர்வு  
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      சுபம்
    சந்திராஷ்டமம்    –        விசாகம், அனுஷம்

  • மே 13 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ….

    மே 13 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ….
    குரோதி வருடம் – சித்திரை – 30
    மே 13, 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    சஷ்டி விரதம்
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி அ.கா 5.28
    நட்சத்திரம் :  புனர்பூசம் ம 2.44
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • மே 12 – ஆதிசங்கரர் ஜெயந்தி….

    மே 12 – ஆதிசங்கரர் ஜெயந்தி….
    குரோதி வருடம் – சித்திரை – 29
    மே 12, 2024
    ஞாயிறு
    ஆதிசங்கரர் ஜெயந்தி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி அ.கா 5.17
    நட்சத்திரம் :  திருவாதிரை ம 1.40
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

     

  • மே 12 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மகிழ்ச்சி
    ரிஷபம்         – ஆசை
    மிதுனம்     – பொறுமை
    கடகம்         –  அச்சம்  
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  நற்செயல்
    தனுசு         –     போட்டி
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      அமைதி  
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –        சுவாதி, விசாகம்

  • செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம்…

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம். புதிதாக செய்த தேரை கோவிலுக்கு அர்ப்பணித்த முதல்வர் ரங்கசாமி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் 110 ஆம் ஆண்டு மகோற்ச்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தொடர்ந்து திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி புதியதாக செய்யப்பட்ட திருத்தேரை கோவிலுக்கு அர்ப்பணித்து முதலாம் ஆண்டு தேரோட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்கள்.

    கோவில் பிரகாரத்தில் இருந்து புறப்பட்ட திரு தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்த தேரோட்டத்தில் அரியாங்குப்பம் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  • தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம்

    தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம்

  • ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஸ்ரீ ராமானுஜர் திருத்தேர் வீதி உலா

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஸ்ரீ ராமானுஜர் திருத்தேர் வீதி உலா